ETV Bharat / state

வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது திருவள்ளூரைச் சேர்ந்தவர் உயிரிழப்பு! - Velliangiri hill climb death toll

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 10:29 PM IST

Etv Bharat
Etv Bharat

Velliangiri hills: வெள்ளியங்கிரி மலையின் ஒன்றாவது மலையேறிய திருவள்ளூரைச் சேர்ந்த 46 வயது நபர் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை தென் கைலாயம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவலிங்கத்தைக் காண்பதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில், வெள்ளியங்கிரி மலைக்கு சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புண்ணியகோடி (46) மற்றும் அவரது நண்பர்கள் 10 பேர் இன்று மதியம் ஒன்றாவது மலை ஏறியுள்ளனர்.

அப்போது, திடீரென புண்ணியகோடிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வயிற்று வலி மற்றும் வாந்தி வந்துள்ளது. எனவே, உடனடியாக சக நண்பர்கள் புண்ணியகோடியை ஒன்றாவது மலையிலிருந்து கீழே அழைத்து வந்து, ஆம்புலன்ஸ் மூலமாக ஆலந்துறை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பூலுவம்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே, வனத்துறை சார்பாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் மூச்சுத் திணறல், இதய நோய், சுவாசக் கோளாறு, உடல் பருமன் உள்ளவர்கள், வயதானவர்கள் ஆகியோர் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என்று அனைத்து துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டது. ஏற்கனவே, வெள்ளிங்கிரி மலை ஏறும் போது 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த உயிரிழப்பு 9-வது ஆகும்.

இதையும் படிங்க: தொடர் உயிரிழப்புகள்.. ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்? - வனத்துறை கூறுவது என்ன? - Velliangiri Hills

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.