தமிழ்நாடு

tamil nadu

‘பாரத் ஜோடா யாத்ரா’ Vs ‘என் மண் என் மக்கள்’.. டென்ஷன் ஆன எம்பி திருநாவுக்கரசு

By

Published : Jul 12, 2023, 8:57 AM IST

குடும்ப பெண்களுக்கு வழங்க உள்ள உரிமைத் தொகை நிதி நெருக்கடியால் மட்டுமே பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு குறிப்பிட்டார்

புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
ராகுல் காந்தி மற்றும் அண்ணாமலை நடைபயணத்தையும் ஒப்பிடகூடாது

புதுக்கோட்டை :புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று (ஜூலை 11) ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த நிலை மற்றும் கூடுதல் நிதி தேவைப்படும் பணிகள் ஆகியவை குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு நடத்தினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு கூறியதாவது, “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளவிருக்கும் நடை பயணத்திற்கும், ராகுல் காந்தி ஏற்கனவே மேற்கொண்ட நடைபயணத்திற்கும் வேறுபாடுகள் உள்ளது. அண்ணாமலை 10 கிலோ மீட்டர் நடந்தால் என்ன அரசியல் மாற்றம் ஏற்பட போகிறது?” என்றார்.

காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர்: “நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவித்து களமிறங்கப்படுகிறது. தற்போது இதனை எதிர்ப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக் கொள்வார்கள்” என கூறினார்.

ஆளுநர் மீது விமர்சனம்: “தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார் என்பதை தெளிவாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். குடியரசுத் தலைவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

நிதிப் பற்றாகுறை: “தமிழ்நாடு அரசு தற்போது குடும்ப பெண்களுக்கு வழங்க உள்ள உரிமைtஹ் தொகை நிதி நெருக்கடி காரணமாகத்தான் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தகுதி உள்ள ஏழைப் பயனாளிகளுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. நிதி நெருக்கடி தீர்ந்த பிறகு அனைவருக்கும் வழங்க வாய்ப்புள்ளது.

கரோனா காலகட்டத்தில் பத்து கோடி ரூபாய் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்து தராததால், தொகுதிகளில் மக்கள் களப்பணிகள் செய்ய முடியவில்லை. தற்போது மக்களை சென்று சந்திக்கும்போது எதுவுமே செய்யவில்லை என்று குறை கூறுகின்றனர். மேலும், இந்த வருட நாடாளுமன்ற உறுப்பினருக்கான நிதி இதுவரை வரவில்லை.

உடனடியாக மத்திய அரசு இந்த வருட நிதியை விடுவிக்க வேண்டும். இதனால் நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்” என குறிப்பிட்டார்.

மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு: “எந்த ஒரு மாநில அரசையும் நேரடியாக மத்திய அரசு கலைக்க முடியாது. ஆனால், அந்த ஆட்சி இல்லாமல் போவதற்கு கட்சியை உடைப்பது, எம்எல்ஏவை விலக்கி வாங்குவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அரசை செயல்பட விடாமல் முடக்கும் செயலையும் மத்திய அரசு செய்கிறது.

அதனால்தான் இது போன்ற பிரச்னைகளை தமிழ்நாடு சந்தித்தாலும், ஆட்சி கலைந்தாலும் பரவாயில்லை. பாஜகவிற்கு எதிராக அடுத்த தேர்தலில் யார் வரக்கூடாது என்பதை முடிவு செய்யும் பணியில் பின் வாங்க மாட்டோம் என்ற ரீதியில்தான் முதலமைச்சர் கூறியுள்ளார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:திமுக எம்.பி.கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details