தமிழ்நாடு

tamil nadu

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் தாம்பூலத் தட்டு பரிசு

By

Published : Oct 11, 2021, 11:40 AM IST

prize for vaccinated people in perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு பேரூராட்சிகளில் நடந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில், தன்னார்வலர்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்குத் தாம்பூலத்தட்டு பரிசாக வழங்கப்பட்டது.

பெரம்பலூர்: மாவட்டம் முழுவதும் 240 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது. பேரூராட்சிப் பகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டர்களுக்கு தாம்பூலத்தட்டு பரிசாக வழங்கப்பட்டது.

அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஐந்தாம் கட்டமாக மாவட்டத்தில் 240 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு கிராமத்திலும் இம்மையங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் 30 ஆயிரம் நபர்களுக்கு நேற்று ஒரே நாளில் தடுப்பூசி செலுத்திடத் திட்டமிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை ஆய்வுசெய்தார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்குப் பரிசு வழங்கும் தன்னார்வலர்கள்

மாவட்டத்தில் உள்ள குரும்பலூர், லப்பைக்குடிக்காடு, பூலாம்பாடி, அரும்பாவூர் ஆகிய நான்கு பேருராட்சிகளிலும் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு தலா ஒரு தாம்பூலத்தட்டு பரிசாக வழங்கப்பட்டது.

இந்தப் பரிசுப்பொருள்களை அந்தந்தப் பேரூராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் வழங்கினர். இதனால் பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

இதையும் படிங்க:தடுப்பூசி போடாதவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

ABOUT THE AUTHOR

...view details