தடுப்பூசி போடாதவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
Updated on: Oct 10, 2021, 4:36 PM IST

தடுப்பூசி போடாதவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
Updated on: Oct 10, 2021, 4:36 PM IST
கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் தடுப்பூசி போடாதவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க, அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மாநில, ஒன்றிய அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, மக்கள் தடுப்பூசி போடுவதை எளிதாக்கும் விதமாக மருத்துவமனைகள், பொது இடங்களில் சமூக இடைவெளியுடன் கூடிய சிறப்புத் தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகின்றது.
தடுப்பூசி செலுத்தியவர்கள்
தமிழ்நாட்டில், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்களை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.
இதுவரை, நான்கு வாரங்கள் நடைபெற்றுள்ள இந்த மெகா தடுப்பூசி மூகாமில் மட்டும் 87 லட்சத்து 80 ஆயிரத்து 262 பயானிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் அரசு, தனியார் மையங்களின் மூலம் (அக். 8 நிலவரப்படி) 5 கோடியே ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 323 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்றும் மெகா தடுப்பூசி முகாம்
அதேபோல், கரோனா தொற்றால் தமிழ்நாட்டில் நேற்று (அக். 9) 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 707 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் முதல் டோஸ் தடுப்பூசிக் கூடப் போடாதவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த மாதங்களில் 88,719 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 63 விழக்காட்டினர் முதல் டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐந்தாம் மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று (அக். 10) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் கோவிட் மீட்பு விகிதம் 97.99% ஆக அதிகரிப்பு!
