தமிழ்நாடு

tamil nadu

கொடுத்த கடனை கேட்க சினிமா வில்லன் போல் பாஜக பிரமுகர்.. நாமக்கல்லில் நடந்தது என்ன?

By

Published : Mar 16, 2023, 8:14 AM IST

நாமக்கல் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் வேலை செய்யும் இடத்திற்குள் புகுந்து சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் தாக்குதல் செய்த பாஜக பிரமுகரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

namakkal
நாமக்கல்

கடனை கேக்க வில்லன் தோரணையில் வந்த பாஜக பிரமுகர்

நாமக்கல்: எருமப்பட்டி அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியில் ராஜ் என்பவருக்கு சொந்தமாக சக்தி பிரிக்ஸ் என்ற பெயரில் செங்கல் சூளை ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூளையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த ருத்திரன் என்பவர் குடும்பத்துடன் அங்கேயே தங்கி பல வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மதுபாலன் என்பவரிடம் ருத்திரனின் மகன் மகரஜோதி 5 லட்சம் கடனாக பெற்றுள்ளார். மேலும் அதில் 4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தை படிப்படியாக கொடுத்து கடனை குறைத்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.

இதன் பின்னர் கடந்த சில வாரங்களுக்கு எஞ்சிய 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை மதுபாலன் மற்றும் அவரது உறவினர் விவேக் ராஜா கேட்டு முறையிட்டுள்ளனர். ஆகையால் கூடிய விரைவில் பணத்தை கொடுத்து விடுகிறேன் என மகரஜோதி உறுதி அளித்துள்ளார். இதை தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதியன்று மதுபாலனின் மகனான பாஜகவை சேர்ந்த ஜெயபிரதாப் ஈரோட்டில் இருந்து பாஜக கொடி கட்டிய தனது காரில் புழுதி பறக்க சினிமாவில் வரும் காட்சியைப் போல் செங்கல் சூளைக்குள் வேகமாக கேட்டை உடைத்துக் கொண்டு வந்துள்ளார்.

அப்போது அதிவேகமாக கார் வருவதை கண்டு, அங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் காரில் இருந்து இறங்கிய ஜெயபிரதாப் சூளையில் இருந்த மகரஜோதியை சட்டையை பிடித்து தள்ளிவிட்டு தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார். இதனை கண்ட மகரஜோதி குடும்பத்தார் ஜெயபிரதாப்பை தடுத்துள்ளனர்.

இருப்பினும் பாஜக பிரமுகர் ஜெயபிரதாப், மகரஜோதியின் குடும்பத்தாரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல் தாக்கவும் முற்பட்டுள்ளார். இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் எருமப்பட்டி காவல் நிலையத்தில் ருத்திரன் கொடுத்த புகாரின் பெயரில் செங்கல் சூளை வளாகத்திற்குள் இருந்த சி.சி.டி.வியில் பதிவான வீடியோ காட்சிகளை கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் ஜெயபிரதாப், அவரது தந்தை மதுபாலன் மற்றும் அவரது உறவினர் விவேக் ராஜா ஆகியோர் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா காட்சிகளில் வில்லன் போல் இரும்பு கேட்டை எல்லாம் உடைத்து கொண்டு காரில் வந்து இறங்கி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:"ஆபிஸ் பக்கம் போகவே பயமா இருக்கு" அலறும் வார்டு உறுப்பினர்கள்.. கரூரில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details