ETV Bharat / state

"காலேஜ் செகண்ட் இயர்லயே கல்யாணமாய்டுச்சு" ஆனாலும் லண்டன் ரிட்டர்ன் - நான் முதல்வன் சக்சஸ் ஸ்டோரி - Naan Mudhalvan Scheme

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 9:49 PM IST

Updated : Jun 18, 2024, 9:50 AM IST

Naan Mudhalvan Scheme: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வெளிநாடு சென்று திரும்பிய மாணவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து கூடுதலாக திட்டத்தை மேம்படுத்த ஆலோசனைகளை கேட்டறிந்தார்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் லண்டன் சென்று வந்த மாணவர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்த போது எடுத்த புகைப்படம்
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் லண்டன் சென்று வந்த மாணவர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்த போது எடுத்த புகைப்படம் (Credit - ETVBharat TamilNadu)

சென்னை: நான் முதல்வன் திட்டம் முதலமை்ச்சரின் கனவு திட்டமாக 2022 மார்ச் 1ஆம் தேதி அவரின் பிறந்த நாளில் துவக்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு திறன்களை வளர்க்கும் வகையில் தொடர்பு ஆங்கிலம், பொறியியல் மாணவர்களுக்கு தொழில் சார்ந்தப் திறன்களும் வளர்க்கப்படுகிறது.

மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் தொழில் திறன் பயிற்சியும் வழங்கப்படுவதுடன், நவீனத் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பாடத்திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டிற்கான திட்டம் வெற்றிகரமாக 2 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று, வேலைவாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர்.

'நான் முதல்வன்' திட்டம் குறித்து மாணவர்கள் கருத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

நான் முதல்வன் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) இணைந்து நடத்திய S.C.O.U.T (Scholars for Outstanding Undergraduate Talent in Tamil Nadu) திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 1267 விண்ணப்பம் செய்தனர். அவற்றிலிருந்து 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் முதலில் 24 மணி நேர ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்று, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 மாணவர்களும், 14 மாணவியர்களும், ஜூன் 9 முதல் 16 வரை இங்கிலாந்தின் Durham பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல் (Data Science) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆகிய முன்னணித் துறைகளில் ஒரு வார காலம் நேரடியாகப் பயிற்சி பெற்றனர்.

இத்திட்டம் தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான கல்லூரி மாணவர்களுக்குச் சர்வதேச அனுபவம் மற்றும் மேம்பட்ட திறன்களைப் பெறுவதற்கான அரிய வாய்ப்புகளைத் தந்துள்ளது. இத்திட்டத்திற்காக, மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களின் பயணம், தங்குமிடம் மற்றும் பயிற்சி முதலிய செலவுகளை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஏற்றுக் கொண்டுள்ளன.

S.C.O.U.T பயிற்சி பெற்று தமிழ்நாடு திரும்பிய இந்த 25 மாணவர்களும், இன்று (ஜூன் 17) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, அவர்களின் வாழ்த்துகளையும் பெற்றனர்.

இவர்களில் 20 மாணவர்கள் அரசுக் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். அவர்களில் சுஜாதா குப்புசாமி மற்றும் கிருத்திகா துளசிமணி ஆகிய 2 மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் படித்த மாணவர்கள் சுப்பிரமணியன், யோகேஸ்வரன், சுஜாதா, பாலாஜி, ரேணுகா ஆகியோர் முதமைச்சரிடம் கூறும்போது, இங்கிலாந்தில் பெற்ற அனுபவத்தை முதலமைச்சரிடம் பகிர்ந்துக் கொண்டனர்.

மேலும் தொழில் துவங்குவதற்கும், வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது. மாணவர்களுக்கு தொழில் திறனை வளர்க்கும் வகையில் ஹக்காத்தான் (Hackathon) போன்ற போட்டிகளையும் நடத்துவதுடன், மாணவர்களே பாடத்திட்டங்களை தேர்வு செய்யும் வகையில் வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவுக்குறித்து தெரியாத நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். வரும் காலத்தில் எலக்ட்ரிக்கல் பேட்டரி வாகனத்திற்கு அதிகளவில் வாய்ப்பு இருக்கிறது என மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும், லண்டன் சென்று திரும்பிய மாணவி சுஜாதா, மீனவ கிராமத்தில் பிறந்த தான் கல்லூரியில் 2 ஆண்டு படிக்கும் போதே திருமணம் செய்துக் கொண்டதாகவும், படிப்பை தொடராமல் பாதியில் நிறுத்தி விடுவேன் என கூறினார். ஆனால் தான் தொடர்ந்து படித்துள்ளேன். புதுமைப்பெண் திட்டம் தொடர்ந்தபடிப்பதற்கு உதவியாக இருந்தது என தெரிவித்தார்.

மேலும், நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதாக அமைந்துள்ளதாக என கேட்டுத் தெரிந்துக் கொண்டதுடன், மாணவர்களின் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, வளர்ச்சி ஆணையர், முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, பிரிட்டிஷ் கவுன்சிலின் தென்னிந்தியாவிற்கான இயக்குநர் ஜனக புஷ்பநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம்: ஓபிஎஸ், சசிகலா தலைமையை கேட்கிறார்களா? - கே.சி.வீரமணி பரபரப்பு பேச்சு! - KC Veeramani about ops and sasikala

Last Updated : Jun 18, 2024, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.