தமிழ்நாடு

tamil nadu

குடியரசு தின விழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

By

Published : Jan 21, 2023, 10:00 PM IST

Etv Bharat

குடியரசு தின விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

மதுரை:நாட்டின் 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு (74th Republic Day) விடுமுறை கால கூட்ட நெரிசலைத் தவிர்க்க பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே இன்று (ஜன.21) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 25 அன்று இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06054) ஜனவரி 29 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கூடுதல் பெட்டிகள் இணைப்பு:இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 26 அன்று இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022) திருநெல்வேலி யிலிருந்து ஜனவரி 27 அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஜனவரி 22 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு துவங்குகிறது' என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. கோயம்பேட்டில் பெண் பத்திரிகையாளருக்கு கசப்பான அனுபவம்

ABOUT THE AUTHOR

...view details