தமிழ்நாடு

tamil nadu

சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை இரும்பு ராடால்  அடித்துக்கொன்ற சகோதரன்!

By

Published : May 11, 2022, 7:53 PM IST

தருமபுரி அருகே சகோதரிக்கு பாலியல்தொல்லை கொடுத்த நபரை கொலை செய்த சகோதரன்.
தருமபுரி அருகே சகோதரிக்கு பாலியல்தொல்லை கொடுத்த நபரை கொலை செய்த சகோதரன் ()

தர்மபுரி அருகே சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொலை செய்த சகோதரனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரிமாவட்டத்தைச் சார்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது சகோதரியை ராஜேஷ் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ய முயன்று அந்தப்பெண்ணை தாக்கி உள்ளார். அந்தப் பெண் உடனே கூச்சலிட்டுள்ளார்.

உடனே குமாரின் ஊரில் இருந்தவர்கள் ராஜேஷை, பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்பொழுது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாலியல் தொந்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட பெண் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ஆத்திரமடைந்த அண்ணன்:ராஜேஷ் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் சென்றுள்ளார். சம்பவம் குறித்து பெண்ணின் சகோதரன் குமாருக்குத் தெரியவரவே ஆத்திரமடைந்த அவர், தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்த ராஜேஷை மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

தாக்கியவுடன் ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். அருகில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக ராஜேஷினை தூக்கிச்சென்று மருத்துவமனையில் சோதித்துப்பார்த்தனர். இதில் ஏற்கெனவே ராஜேஷ் உயிரிழந்தது தெரியவந்தது.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

விசாரணையில் போலீஸ்: கொலைச்சம்பவம் குறித்து தர்மபுரி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து கொலை நடந்த தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே இளைஞனை அடித்துக் கொலை செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பாய் பெஸ்டிக்கு கத்தி குத்து.. காதலியை அம்மு என அழைத்ததால் ஆத்திரம்..

ABOUT THE AUTHOR

...view details