தமிழ்நாடு

tamil nadu

கோடநாடு விவகாரத்தில் அதிமுக மீது மக்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது - இரா. முத்தரசன்

By

Published : Aug 23, 2021, 8:16 AM IST

Updated : Aug 23, 2021, 10:01 AM IST

இரா. முத்தரசன்
இரா. முத்தரசன்

கோடநாடு விவகாரத்தில் மக்களுக்கு இப்போது அதிமுக மீது சந்தேகம் வந்துவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கடலூர்: இரா. முத்தரசன் தலைமையில் நேற்று (ஆக. 22) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசிய அவர், "நாடாளுமன்றம் செயல்படாமலே 21-க்கும் அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை, உச்ச நீதிமன்ற நீதிபதியே விமர்சனம் செய்துள்ளார்.

இதனால், வரும் 23ஆம் தேதிமுதல் 27ஆம் தேதி வரையில் மக்கள் நாடாளுமன்றம் என்ற நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம். இதற்காக, ஐந்து லட்சம் சிறு பிரதிநிதிகள் அச்சடித்து அதனை மக்களிடையே விநியோகிக்க உள்ளோம்.

இதில், மோடி அரசில் மக்கள்படும் துன்பங்களை விளக்கி உள்ளோம். ஒவ்வொரு மக்கள் நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு நாள்தோறும் அனுப்பிவைப்போம்.

வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை

தொடர்ந்து, வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைத் தமிழ்நாடு அரசு தாக்கல்செய்திருப்பதை வரவேற்கிறோம். இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு, பனைமரம் பாதுகாப்பு, பாரம்பரிய நெல் வகைகள் பாதுகாப்பு, 33 விழுக்காடு காடுகள் அதிகரிப்பு போன்ற திட்டங்கள் வரவேற்க கூடியதாக உள்ளது. கூடுதலாக செய்ய வேண்டியதையும் கட்சி சார்பில் எடுத்து கூறியுள்ளோம்.

கோடநாடு விவகாரம்

இரா. முத்தரசன்

கோடநாடு விவகாரத்தில் கொலையும், கொள்ளையும் நடந்துள்ளன. ஆனால், அதில் ஈடுபட்டவர்கள் யாருக்காக ஈடுபட்டனர் என்பதுதான் இப்போதைய கேள்வி. அப்படி இருக்கையில் அதிமுகவினர் சட்டப்பேரவையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு இப்போது அதிமுக மீது சந்தேகம் வந்துவிட்டது.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் சுமார் 3 மணி நேரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனடிப்படையில்தான் தற்போது விசாரணை நடக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டியது இல்லை என்று ஒரு கட்சியின் அகில இந்திய நிர்வாகியே கூறுவது விந்தையாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும்” என்றார்.

இக்கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.எம். மூர்த்தி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி. மணிவாசகம், மாநிலக் குழு உறுப்பினர் வி. குளோப் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க : ‘காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட வேண்டாம்’

Last Updated :Aug 23, 2021, 10:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details