தமிழ்நாடு

tamil nadu

கோடநாடு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரிடம் விசாரணை

By

Published : Jan 8, 2022, 9:08 PM IST

Updated : Jan 8, 2022, 11:19 PM IST

கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரிடம் தனிப்படைக் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அடுத்த கட்டமாக அரசியல்வாதிகளிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை
கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை

கோயம்புத்தூர்: 2017ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தனிப்படைக் காவல் துறை விசாரணை

கோடநாடு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இதனிடையே கோடநாடு வழக்கில் நீலகிரி காவல் துறையினர் ஐந்து தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை 150-க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர்.

இவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதேபோல கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்டோரிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஒரு கட்சியினர் பேரம் பேசியதாக வாக்குமூலம்

இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஐந்து பேரிடம் ஒரே நேரத்தில் கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் நீலகிரி தனிப்படைக் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்டு பிணையில் உள்ள திபூ, சதீசன், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

கோடநாடு வழக்கில் ஒரு கட்சியினர் பேரம் பேசியதாக திபூ கூறியிருந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த விசாரணையின்போது மேற்கு மண்டல காவல் துறைத் துணைத் தலைவர் முத்துசாமி நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:சத்தியமங்கலத்தில் அவசர அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

Last Updated :Jan 8, 2022, 11:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details