தமிழ்நாடு

tamil nadu

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7PM

By

Published : Oct 5, 2021, 7:09 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.
ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

நாளை நடக்கிறது உள்ளாட்சித் தேர்தல்... பணிகள் மும்முரம்

தமிழ்நாட்டில் நாளை நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பணிகள் மும்முரமடைந்துள்ளன.

மருது பாண்டியர்கள் குரு பூஜை நடத்த அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மருது பாண்டியர்களின் குரு பூஜையை நடத்த அனுமதி கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 10 நாள்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க சாத்தியம் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சாலைகளை சீரமைக்கக்கோரிய வழக்கு: மதுரை கலெக்டர் பதில் அளிக்க உத்தரவு

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்கக்கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 5000 ஊக்கத்தொகை திட்டம் தொடக்கம்!

கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 5000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

குஜராத் உள்ளாட்சித் தேர்தல் - பாஜக அமோக வெற்றி

குஜராத் மாநில மாநகராட்சித் தேர்தலில் பாஜக மூன்று நகராட்சிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

ராகுல் காந்தி கரங்களுக்கு வலு சேர்ப்பாரா சித்த ராமையா!

தேசிய அரசியலில் நாட்டமில்லை எனக் கூறிவரும் சித்த ராமையா, டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

கவினின் லிஃப்ட்: வாழ்த்து தெரிவித்த விஜய் பட இயக்குநர்

நடிகர் கவின் நடித்துள்ள 'லிஃப்ட்' படத்திற்கு விஜய்யின் 'பீஸ்ட்' பட இயக்குநர் நெல்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூகவலைதளங்களில் புதிய சாதனை படைத்த சிம்புவின் 'மாநாடு' ட்ரெய்லர்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' படத்தின் ட்ரெய்லரை இதுவரை 80 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

புதுச்சேரியில் புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிட அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை திரும்ப பெறுவதாக புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details