தமிழ்நாடு

tamil nadu

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

By

Published : Sep 24, 2021, 7:12 PM IST

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம் ()

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

1. ஆமை காட்டெருமை ஆன கதை - புதிய உச்சம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி

இந்திய பங்குசந்தை இன்றைய வர்த்தக தினத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 163 புள்ளிகள் உயர்வுடன் 60,048ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 17,853 ஆகவும் இன்றைய வர்த்தக தினத்தில் உச்சம் பெற்றிருந்தது.

2. அரசு மீது பொய் கருத்துகளை பரப்பும் எடப்பாடி - தங்கம் தென்னரசு

"திமுக ஆட்சியின் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். திமுகவின் 130 நாட்கள் ஆட்சியில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

3. நல்ல செய்தி - பெண் காவலர்களின் பணிநேரம் 8 மணிநேரமாக குறைப்பு

மகாராஷ்டிரா மாநில பெண் காவலர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து, 8 மணிநேரமாக அரசு குறைத்துள்ளது. இதற்கான உத்தரவை காவல் துறை தலைவர் சஞ்சய் பாண்டே வெளியிட்டார்.

4. நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு- டெல்லியில் பரபரப்பு

வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

5. பட்டாசு ஆலைகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - அமைச்சர் அறிவுறுத்தல்

விபத்தில்லா தீபாவளியை உறுதி செய்ய பட்டாசு ஆலைகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சி.வி. கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.

6. உடனடியாக மதிய உணவுத் திட்டத்தை தொடங்க உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்

1 முதல் 8ஆம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டவுடன், உடனடியாக மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7. தமிழ் மொழிப்பாடம் கட்டாயம்... டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய விதிகள் அறிமுகம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட 75 நாட்களுக்குப் பின்னரே எழுத்துத் தேர்வு நடைபெறும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

8. உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவுக்கு விளக்கம் அளிக்கும்படி ஆணையத்திற்கு உத்தரவு

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தும் கோரிக்கை குறித்து செப்டம்பர் 29-க்குள் அதிமுகவிற்கு விளக்கம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9. பேன்சி நம்பருக்கு ரூ.17 லட்சம்: என்ன நம்பர் தெரியுமா?

நடிகர் ஜூனியர் என்டிஆர் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர காருக்கு ரூ. 17 லட்சம் செலவழித்து பின்வரும் பேன்சி நம்பரை வாங்கியுள்ளார்.

10. அஸ்ஸாம் துப்பாக்கிச்சூடு: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை!

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும்போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதி விசாரணை நடத்த அஸ்ஸாம் அரசு உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details