தமிழ்நாடு

tamil nadu

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் top 10 news @ 7 pm

By

Published : Aug 30, 2021, 6:59 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

1. இளைஞர் வெட்டி கொலை - காவல் துறை விசாரணை

கரூர் லாலாப்பேட்டை அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

2. துறையில் நடக்கும் தவறுகளுக்கு அத்துறைஅமைச்சர்களே பொறுப்பு - நிதியமைச்சர்

துறை ரீதியாக அரசு அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் போது, துறைத்தலைவர்களான அமைச்சர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்கமுடியும். துறைகளில் நடக்கும் தவறுகளுக்கு அத்துறையின் தலைவர்களான அமைச்சர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

3. தகுதி இருந்தும் பதவி உயர்வு இல்லை - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்

உரிய தகுதிகள் இருந்தும், தனக்கு பதவி உயர்வு வழங்காததால் விரக்தியில் விருப்ப ஓய்வு பெற்ற இந்திய வனப்பணி அலுவலர் தமிழ்நாடு அரசிடம் 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

4. 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த கல்லூரி மாணவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

5. கர்நாடக அரசை எதிர்த்துப் போராட வேண்டும் - ஜி.கே.மணி

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடக அரசை எதிர்த்துப் போராட வேண்டும் என பென்னாகரம் சட்டபேரவை உறுப்பினர்ருமான ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

6. பெண்ணின் கர்ப்ப பையில் 3 கிலோ கட்டி அகற்றம்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழங்குடியின பெண்ணுக்கு கர்ப்ப பையில் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 3 கிலோ கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை செய்துள்ளனர்.

7. மின்னணுக் கழிவுகளை விற்க இ-சோர்ஸ் இணையதளம்

மின்னணுக் கழிவுகளை நிர்வகிக்க இ-சோர்ஸ் என்னும் இணையதளத்தை சென்னை ஐஐடி உருவாக்குகிறது. மேலும் இதன் மூலம் 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள 53.6 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகளை மறு பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

8. 23 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை... இப்போது கைது

23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை குற்றவாளியை அம்பாசமுத்திரம் காவல் துறையினர் இன்று (ஆக. 30) கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

9. திருவள்ளூரில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம்

திருவள்ளூர் புதுமாவிலங்கை ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 300க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

10. திமுகவினர் மண் அள்ளுவதை தடுத்தால் வழக்கு - விவசாயில் போராட்டம்

திமுகவினர் மண் அள்ளுவதை தடுத்த, தன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததாக கூறி செல்ஃபோன் கோபுரத்தின் மீது ஏறி விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டார்.

ABOUT THE AUTHOR

...view details