தமிழ்நாடு

tamil nadu

‘தொழில்நுட்பத்தால் அதிக பாதிப்பை சந்தித்தவள் நான்’ - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

By

Published : Jul 20, 2023, 8:20 PM IST

விழி இழப்பு இல்லாத புதுவையை உருவாக்க முயற்சி செய்து வருவதாக அப்துல்கலாமின் நினைவு நாள் கருத்தரங்கில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

‘தொழில்நுட்பத்தால் அதிக பாதிப்பை சந்தித்தவள் நான்’ - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு
‘தொழில்நுட்பத்தால் அதிக பாதிப்பை சந்தித்தவள் நான்’ - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

‘தொழில்நுட்பத்தால் அதிக பாதிப்பை சந்தித்தவள் நான்’ - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

சென்னை:சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் பங்கேற்ற தமிழிசை மாணவர்கள் தொழில் நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, வேல்ஸ் பல்கலைக்கழகம் தேசிய கருத்தரங்கை நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் கருத்தரங்கில் பங்கேற்க அவர் குடும்பத்தினர் அழைப்பு விடுத்ததாகவும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தமிழிசை கூறினார்.

கருத்தரங்கில் அவர் பேசுகையில், ''இன்று சந்திரயான் 3 என்ற விண்கலத்தை அனுப்பி உலக நாடுகள் அனைத்தும் வியந்து பார்க்கக்கூடிய அளவு நாம் மிகப்பெரிய சாதனையை படைத்துக் கொண்டிருப்பதற்கு அப்துல் கலாம் அவர்களுக்கு நாம் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், இதற்கான ஆரம்ப விதையைப் போட்டவர் அவர் தான்'' எனப் பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Valparai:முறையற்ற சிகிச்சையால் அலைக்கழிப்பில் கர்ப்பிணிகள்;அரசு மருத்துவர்களை பணிடமாற்றம் செய்ய கோரிக்கை

தொடர்ந்து பேசிய அவர், ''அப்துல் கலாம் என்றாலே தொலைநோக்கு பார்வை கொண்டிருந்தவர் என்பது மட்டுமல்ல, அவர் பெரியவர்களையோ, விஞ்ஞானிகளையோ விரும்பவில்லை. மாணவச் செல்வங்களைத்தான் விரும்பினார். மாணவர்கள் பெரிதாக சிந்திக்க வேண்டும், செல்போனில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸை (Artificial intelligence) புகுத்தி அனைவரது கரு விழிகளையும் பரிசோதித்து, அதன் மூலம் அவர்களுக்கு ஏதும் குறைபாடுகள் இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு மிகப்பெரிய திட்டத்தை புதுவையில் ஆரம்பித்துள்ளோம். அதன் (AI) மூலம் விழி இழப்பு இல்லாத புதுவையை உருவாக்க முயற்சி செய்து வருவதாகவும், அதனை அப்துல்கலாமிற்கு சமர்ப்பிக்கின்றோம்” எனவும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “தொழில்நுட்பம் எந்த அளவு தவறான நிகழ்வுகளை நமக்கு தருகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். தொழில் நுட்பத்தால் அதிக பாதிப்பை சந்தித்தவள் நான், டிரோல் செய்து தொழில் நுட்பத்தால் எனக்கு பாதிப்பு ஏற்படுத்தினார்கள்.

மாணவர்கள் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கோடு மாணவர்கள் இருக்க வேண்டும். அதற்கு தொழில்நுட்பம் மாணவர்களுக்கு உதவும். அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி காண வேண்டும். சாதனையாளராக மாறியே தீருவேன் என்ற கனலோடு மாணவர்கள் இருக்க வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது -முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

ABOUT THE AUTHOR

...view details