தமிழ்நாடு

tamil nadu

காந்தி ஜெயந்தி: சென்னையில் தமிழக ஆளுநர், முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 2:26 PM IST

Gandhi jayanti 2023: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Gandhi jayanti 2023
காந்தி ஜெயந்தி: சென்னையில் தமிழக ஆளுநரும் மற்றும் முதல்வரும் மரியாதை செலுத்தினர்

சென்னை:தேசத் தந்தை மகாத்மா காந்தி, 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார். இந்த ஆண்டு அவரது 154வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கும், மக்களின் வாழ்க்கைக்கான தத்துவங்களுக்கும் மகத்தான பங்களிப்பைச் செய்த, மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில், இன்று (அக். 2) காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

அதன்படி காந்தியின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (அக் 02) சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வின் போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:பிடி உஷாவின் 40 ஆண்டுகால சாதனை சமன்! ஆசிய விளையாட்டில் ஜொலிக்கும் தமிழக வீராங்கனை!

ABOUT THE AUTHOR

...view details