தமிழ்நாடு

tamil nadu

LKG சீட் வாங்கித் தருவதாக ரூ. 5 லட்சம் மோசடி - மதுவந்தி மீது புகார்!

By

Published : Oct 4, 2021, 8:24 AM IST

fraud complaint against mathuvanthi

சென்னை கேகே நகர் பத்மா சேஷாத்திரி பள்ளியில் எல்கேஜி சீட் வாங்கித் தருவதாக கூறி ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி 5 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

சென்னை:சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ராஜகோபால், கேகே நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தன்னுடைய மகளுக்கு சீட் வாங்கித்தருவதாக கூறி ஐந்து லட்சம் ரூபாயை ஒய்.ஜி. மகேந்திரனனின் மகள் மதுவந்தி பெற்றார் என்றும், இதுவரை சொன்னபடி சீட் வாங்கித் தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், பணத்தை திருப்பிக்கேட்டபோது, பணத்தை மதுவந்தி தரமறுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தப்புகார் குறித்து கே.கே. நகர் காவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஜன் தன் திட்டத்திற்கு, ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கிய ரூ. 30 ஆயிரம் கோடியில் 40 விழுக்காடு அதாவது ரூ. 20 ஆயிரம் கோடி பெண்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது என்றும், இந்தியாவில் 8 ஆயிரம் கோடி மக்கள் இருகிறார்கள் என்றும் உளறிக் கொட்டி நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டவர்தான் மதுவந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:‘மது’வுக்கு ஒரு சியர்ஸ்

ABOUT THE AUTHOR

...view details