தமிழ்நாடு

tamil nadu

பள்ளிகளை முன்கூட்டியே திறக்க கல்வித்துறை திட்டம்?

By

Published : May 14, 2022, 5:20 PM IST

பள்ளிகளை முன்கூட்டியே திறக்க கல்வித்துறை

வரும் கல்வி ஆண்டு ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே திறப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் கல்வி ஆண்டு ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது முன்கூட்டியே திறப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு தவிர்த்து, மற்ற வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு என்பது ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் பள்ளி கல்வி ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். இதனால் பள்ளிகளை முன்கூட்டியே திறப்பதற்கு கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கரோனா தொற்று குறைந்து இருக்கக்கூடிய சூழலில் கால தாமதம் செய்யாமல், வழக்கம் போலவே ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து உயர் அலுவலர் ஒருவர் கூறும்போது, பள்ளி திறப்பு தேதி இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், ஓரிரு நாளில் இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாணவர்களை பள்ளிகளில் இருந்து நீக்குவதா? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு குழந்தைகள் ஆர்வலர்கள் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details