தமிழ்நாடு

tamil nadu

2ஆவது முறையாக ஜூனியர் ரேங்கிங் பட்டத்தை வென்று அசத்திய மான்சி!

By

Published : Jan 27, 2020, 12:02 PM IST

பெங்களூரு: இந்தியாவின் ஜூனியர் பேட்மிண்டன் வீராங்கனை மான்சி சிங், தொடர்ச்சியாக இரண்டாவது முறை  ஜூனியர் ரேங்கிங் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

Mansi wins 2nd successive Junior Ranking title
Mansi wins 2nd successive Junior Ranking title

இந்தியாவின் நட்சத்திர ஜூனியர் பேட்மிண்டன் வீராங்கனையாக வலம்வருபவர் ஹரியானவைச் சேர்ந்த மான்சி சிங். இவர் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய மகளிர் ஜூனியர் ரேங்கிங் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மான்சி, தெலங்கானாவைச் சேர்ந்த மேகனா ரெட்டியை எதிர்கொண்டார். பரபரப்பான ஆட்டத்தில் தனது அதிரடியை வெளிப்படுத்திய மான்சி 21-10, 21-14 என்ற நேர் செட்கணக்கில் மேகனாவை வீழ்த்தி தேசிய மகளிர் ஜூனியர் ரேங்கிங் பேட்மிண்டன் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

மேலும் இவர் கடந்தாண்டு நடைபெற்ற தேசிய மகளிர் ஜூனியர் ரேங்கிங் பட்டத்தையும் கைப்பற்றினார். இதன்மூலம் தொடர்ச்சியாக இருமுறை ஜூனியர் ரேங்கிங் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க:அப்போ 203 ரன்கள்... இப்போ 132தான்; நியூசிலாந்தைக் கட்டுப்படுத்திய இந்தியா!

Intro:Body:

Mansi wins 2nd successive Junior Ranking title


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details