ETV Bharat / sports

டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு.. எலிமினேட்டரில் வெளியேறப் போவது யார்? - RR Vs RCB

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 7:16 PM IST

RCB Vs RR: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

சஞ்சு சாம்சன் புகைப்படம்
சஞ்சு சாம்சன் புகைப்படம் (credits - AP)

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று முடிந்தன. அந்த வகையில், ஐபிஎல் தொடரின் 72வது போட்டியான எலிமினேட்டர் போட்டி இன்று (மே 22) அகமதாபாத் மாநிலம், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 2-ல் விளையாடும். இதில் தோல்வியடையும் அணி எலிமினேட்டரில் வெளியேறும். இந்த போட்டியில் எந்த அணி வெளியேறப் போகிறது, எந்த அணி குவாலிபையர் 2இல் விளையாடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுந்து காணப்படுகிறது.

இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் வீசப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

பிளேயிங் ஸ்குவாட்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கேமரூன் கிரீன், க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், கர்ண் சர்மா, யாஷ் தயாள், முகமது சிராஜ், லாக்கி பெர்குசன்

ராஜஸ்தான் ராயல்ஸ் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர்-காட்மோர், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

இதையும் படிங்க: 16 ஆண்டுகால கனவை நனவாக்குமா ஆர்சிபி? எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தானுடன் இன்று மோதல்! - RR Vs RCB Eliminator

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.