ETV Bharat / sports

16 ஆண்டுகால கனவை நனவாக்குமா ஆர்சிபி? எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தானுடன் இன்று மோதல்! - RR vs RCB Eliminator

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 2:42 PM IST

RR vs RCB Eliminator: இன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர் போட்டியில் (Eliminator) ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

RR vs RCB கோப்பு புகைப்படம்
RR vs RCB கோப்பு புகைப்படம் (Credit - IANS)

அகமதாபாத்: 17வது ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் எலிமினேட்டர் போட்டியில் (Eliminator) ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது தொடங்கப்படவுள்ளது.

இந்த தொடரின் ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த ராஜஸ்தான் அணி. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4ல் தோல்வியை சந்தித்தது. மேலும் கடைசியாக கொல்கத்தா அணியுடன் நடைபெறவிருந்த லீக் போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதனால் குவாலிபையர் 1 ல் விளையாட வேண்டிய அணி தற்போது எலிமினேட்டர் சுற்றில் விளையாடுகிறது.

ஆரம்பத்தில் பெரும் பின்னடைவை சந்தித்து புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் இருந்த ஆர்சிபி, கடைசியாக விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளது. பந்துவீச்சில் தடுமாற்றத்தை கண்ட அந்த அணி தற்போது கம்பேக் கொடுத்துள்ளது என்றே சொல்லாம்.

மைதானம் எப்படி? அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் சேஸிங்கிற்கு உகந்ததாகப் பார்க்கப்படுகிறது. நடப்பு தொடரில் மொத்தம் 6 போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் 4 போட்டிகளில் சேஸிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற குவாலிபையர் 1ல் கூட சேஸிங் செய்த அணிதான் வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்: இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 15 முறை ஆர்சிபியும், 13 முறை ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக பிளே ஆஃப் சுற்றில் இரண்டு முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 1 வெற்றியை பதிவு செய்து உள்ளனர்.

பிளே ஆஃப்: இதுவரை 6 முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முறை கோப்பையை வெற்றியுள்ளது. அதே போல் 9 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள ஆர்சிபி அணி 3 முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

ஆனால் 16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அந்த அணி கோப்பைய வென்றதே கிடையது. இந்த பெரும் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஆர்சிபி என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இந்த எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் மே24 ஆம் தேதி ஹைதராபாத் அணியை சென்னையில் எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹைதராபாத் அணியின் தோல்விக்கு காரணம் என்ன? ஃபைனலுக்கு செல்ல இன்னொரு வாய்ப்பு.. நேற்றைய ஐபிஎல் போட்டி ஓர் அலசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.