ETV Bharat / state

ஹைதராபாத் அணியின் தோல்விக்கு காரணம் என்ன? ஃபைனலுக்கு செல்ல இன்னொரு வாய்ப்பு.. நேற்றைய ஐபிஎல் போட்டி ஓர் அலசல்! - SRH loss against KKR

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 11:04 AM IST

SRH loss against KKR: ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹைதராபாத் அணி குவாலிஃபையர் 1ல் பல சொதப்பல்களை செய்ததால் தோல்வியை சந்தித்துள்ளது.

ஹைதராபாத் அணி வீரர்கள்
ஹைதராபாத் அணி வீரர்கள் (Credit - IANS)

அகமாதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற குவாலிஃபயர் (Qualifier 1) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு: இந்த போட்டியில் டாஸ் வென்ற பேட் கம்மின்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இரவு நேரந்தில் பந்து வீசுவது கடினமாக இருக்கும் எனும் நிலையில் ஒவ்வொரு அணியும் டாஸ் வென்று பந்து வீசவே விரும்பின ஆனால் அதற்கு நேர்மாறாக பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதுதான் தோல்விக்கான முதல் காரணமாக பார்க்கப்படுகிறது.

4 டக் அவுட்: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெறுமையை பெற்றுள்ள ஹைதராபாத் அணி இந்த போட்டிங்கில் பேட்டிங்கில் சொதப்பியது. முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவித்துவிடலாம் என்ற எண்ணத்தில் களமிறங்கிய அந்த அணி பவர்பிளே முடிவதற்குள் 4 விக்கெட்டிகளை இழந்தது.

அதே போல் டிராவிஸ் ஹெட், சபாஷ் அகமது, இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய சன்வீர் சிங், இறுதியில் களமிறங்கிய புவனேஸ்வர் குமார் ஆகிய 4 பேட்ஸ்மேன்களும் டக் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் அந்த அணியால் எதிர்பார்த்த ரன்களை குவிக்க முடியவில்லை.

2 கேட் மிஸ்: இந்த போட்டியில் சிறப்பக விளையாடி கொண்டு இருந்த ஸ்ரேயாஸ் ஐயரின், 2 கேட்களை ஹைதராபாத் வீரர்கள் கோட்டை விட்டனர். அதே போல் நேற்றை போட்டியில் அந்த அணியின் பீல்டிங்கும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

மேலும் 42 பந்துகளில் 18 ரன்கள் தேவை என்று இருந்த போது அணியின் உள்ள சீனியர் பந்துவீச்சாளர்களை விட்டு விட்டு டிராவிஸ் ஹெட்டை பந்து வீச அழைத்தார் கம்மின்ஸ். இதனால் அந்த ஓவரிலேயே போட்டியை முடித்துவிட்டு நடையைக் கட்டியது கேகேஆர்.

மனம் திறந்த கம்மின்ஸ்: தோல்வி குறித்து ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், "இந்த நாளை விட்டு விரைவாக வெளியில் வர வேண்டும். எங்களிடம் சில நல்ல தொடக்கங்கள் இருந்தன ஆனால் அதனை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. நாங்கள் பேட் மற்றும் பந்து என இரண்டிலும் சரியாகவே செயல்படவில்லை.

இம்பேக்ட் பிளேயராக உம்ரன் மாலிக்கை பயன்படுத்தும் திட்டம் எங்களிடம் இல்லை. நாங்கள் கூடுதல் பேட்ஸ்மேன் வேண்டும் என்று உணர்ந்து சனவீர் சிங்கை கொண்டு வந்தோம். நாங்கள் அடுத்து சென்னைக்கு சென்று விளையாட இருக்கிறோம். புது இடத்திற்கு நகர்ந்து சென்ற விளையாடுவது நல்ல உணர்வு" என தெரிவித்தார்.

2 வது வாய்ப்பு: ஹைதராபாத் தோல்வியை தழுவினாலும் அந்த அணிக்கு இன்னெரு வாய்ப்பு உள்ளது. அதாவது இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் மே24 ஆம் தேதி ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும்.

இதையும் படிங்க: தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு.. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.