தமிழ்நாடு

tamil nadu

உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலையை காண குவிந்த பக்தர்கள்

By

Published : Sep 10, 2021, 8:44 PM IST

Updated : Sep 10, 2021, 9:23 PM IST

ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கைரட்டாபாத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற, மிகப்பெரிய விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆளுநர், அரசியல் பிரமுகர்கள், பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தெலங்கானா விநாயகரைக் காணக் குவிந்த பக்தர்கள்
தெலங்கானா விநாயகரைக் காணக் குவிந்த பக்தர்கள்

ஹைதராபாத்: விநாயகர் சதுர்த்தி விழா தெலங்கானா மாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலையைக் காண ஏராளமான பக்தர்களும், அரசியல் பிரமுகர்களும், ஆட்சியாளர்களும் குவிந்து வருகின்றனர்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ஹரியானா ஆளுநர் பண்டாரு டத்தாத்ரேயா ஆகியோரும் விநாயகர் சிலையை வழிபட்டனர்.

"ஆளுநர் தமிழிசை, கைரட்டாபாத்தில் உள்ள விநாயகர் சிலையை வழிபட்டார். மாநில மக்களின் நல்வாழ்வுக்காக அவர் பிரார்த்தனை செய்தார்" என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர், கூடுதல ஆட்சியர் வெங்கடேஷ்வரா, டிஐஜி விஸ்வபிரசாத் ஆகியோரும் நேரில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலையைக் காணக் குவிந்த பக்தர்கள்

பின்னர், தெலங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் பிரார்த்தனை செய்தார். கரோனா தொற்று காலத்தில் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த உத்சவ் குழுவை அவர் பாராட்டினார்.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். பிரார்த்தனை செய்யும் போது கரோனா விதிகளை யாரும் மீற வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Last Updated :Sep 10, 2021, 9:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details