ETV Bharat / lifestyle

ஓப்போ ரெனோ 7 5ஜி ப்ரீ-ஆர்டர் தொடக்கம்... அட்டகாசமான அம்சங்கள் உள்ளே...

author img

By

Published : Feb 11, 2022, 5:38 PM IST

oppo-reno-7-5g-pre-orders-start-in-india-today
oppo-reno-7-5g-pre-orders-start-in-india-today

இந்தியாவில் ஓப்போவின் ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி ரோம், 64 MP கேமிரா என்று அட்டகாசமான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் ஓப்போ ரெனோ 7 5G ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்று(பிப்.11) தொடங்கியது. இந்த ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் ஓப்போ இந்தியா வலைத்தளம், பிளிப்கார்ட் மூலம் முன்பதிவு செய்யலாம்.

6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 90Hz ரிப்ரெஷ் ரேட், 64எம்பி கேமிரா வசதியுடன் அட்டகாசமான வடிவமைப்பில் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான ஓப்போ ரெனோ 6 5ஜி போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஓப்போ ரெனோ 7 5ஜியின் விலை 8 ஜிபி + 256 ஜிபி மாடலுக்கு ரூ.28,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல 12 ஜிபி + 256 மாடலுக்கு ரூ.39,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருப்பு, ஸ்டார்ட்ரெயில்ஸ் நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

ஒப்போ ரெனோ 7 5ஜி அம்சங்கள்

  • 6.4 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
  • மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்
  • 8GB ரேம், 256GB மெமரி
  • 64MP பிரைமரி கேமரா(பின் பக்க கேமரா)
  • 8MP அல்ட்ரா வைடு கேமரா
  • 2MP மேக்ரோ கேமரா
  • 32MP செல்ஃபி கேமரா(முன் பக்க கேமரா)
  • ஆண்ட்ராய்டு 11, ஓப்போவின் கலர் ஓ.எஸ். 12
  • 4500mAh பேட்டரி
  • 65 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்
  • டைப்-C USB
  • சென்சார்கள்(accelerometer, ambient light sensor, gyroscope, pedometer, and proximity sensor)
  • Amoled திரை

இதையும் படிங்க: #BoycottHyundai: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹுண்டாய் கருத்து - இந்தியர்கள் கடும் எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.