தமிழ்நாடு

tamil nadu

கைதி ரீமேக்கா இது...?; போலா படத்தின் டீஸர் வெளியீடு

By

Published : Nov 22, 2022, 8:03 PM IST

கைதி ரீமேக்கா இது...? ; போலா படத்தின் டீசர் வெளியீடு
கைதி ரீமேக்கா இது...? ; போலா படத்தின் டீசர் வெளியீடு ()

நடிகர் அஜய் தேவ்கன் இயக்கி நடித்திருக்கும், தமிழில் வெளியான ‘கைதி’ படத்தின் ரீமேக் படமான 'போலா' திரைப்படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப்பெற்று, தமிழ் சினிமாவின் ஓர் முக்கியமான திரைப்படமாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இந்தி ரீமேக்கான போலா படத்தின் டீஸர் இன்று(நவ.22) இணையத்தில் வெளியானது.

நடிகர் அஜய் தேவ்கன் நடித்து இயக்கும் இந்தத் திரைப்படம் கைதி படத்தைப் போல, ரியாலிட்டி கலந்த ஆக்‌ஷன் திரில்லராக அல்லாமல் பாலிவுட்டின் வழக்கமான, ஓர் மசாலா படத்திற்குத் தேவையான அம்சங்களை பொருத்தியிருப்பதாக இந்தப்படத்தின் டீஸரைக் காணும்போது தெரிய வருகிறது.

படத்தின் டைட்டிலில் சூலாயுதம், சேசிங்கிலும் திரிசூலம், மாஸ் ஹீரோவுக்கான பில்டப் என டீஸரிலேயே கைதி படத்தில் அல்லாத பல மசாலா அம்சங்களைக் காணமுடிகிறது. இதைவிட பெரும் விந்தை என்னவென்றால் இந்தப் படம் 3D தொழில்நுட்பத்தில் எடுக்கப்படுகிறது. கைதி போன்ற யதார்த்தமான ஓர் ஆக்‌ஷன் திரில்லர் படத்தை 3Dயில் ரீமேக் செய்வதெல்லாம் பாலிவுட்டில் தான் நடக்கும் போலும்.

இதையும் படிங்க: கடவுள் அருள் இருந்தால் அஜித், விஜய்யை இயக்குவேன் - எஸ்.ஜே.சூர்யா

ABOUT THE AUTHOR

...view details