தமிழ்நாடு

tamil nadu

திட்டங்களை விரைந்து முடிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

By

Published : Sep 16, 2021, 3:09 PM IST

Updated : Sep 16, 2021, 3:27 PM IST

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிக் கல்வித் துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை, திட்டங்களை விரைந்து செயல்படுத்தி முடிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அலுவலகத்தில் இன்று
(செப். 16) நடைபெற்றது .

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மணிகண்டன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மேலாண்மை திட்ட இயக்குநர் சுதன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து அமைச்சர் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அதற்காக அரசு சார்பில் தேவையான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இன்று(செப்.16) அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அதன்படி செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகிஉள்ளது.

இதையும் படிங்க: 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க திட்டம்!

Last Updated :Sep 16, 2021, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details