தமிழ்நாடு

tamil nadu

'அப்படியே தொடரும் ரெப்போ வட்டி விகிதம்' - ஆர்பிஐ ஆளுநர்

By

Published : Jun 4, 2021, 10:56 AM IST

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும் ரெப்போ வட்டி விகிதம் 4 விழுக்காடாக தொடர்கிறது எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கரோனா கால பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பேரிடி ஏற்பட்டது. அப்போது, ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டன. அதன்படி, இறுதியாக ரெப்போ விகிதம், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் முறையே 4 விழுக்காடு மற்றும் 3.35 விழுக்காடாக இருந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், "ரெப்போ விகிதம் 4 விழுக்காடாக மாறாமல் உள்ளது. வளர்ச்சியைப் புதுப்பிக்கவும், நிலைநிறுத்தவும், பொருளாதாரத்தில் கரோனாவின் தாக்கத்தைத் தணிக்கவும் தேவையான வரை வசதியை ஏற்படுத்தி தர நாணயக் கொள்கைக் குழு (எம்.சி.சி) முடிவு செய்தது.

இதனால் ரெப்போ விகிதத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் (எம்.எஸ்.எஃப்), வங்கி விகிதங்கள் 4.25 விழுக்காடாக மாறாமல் உள்ளன. ரிவர்ஸ் ரெப்போ வீதமும் 3.35 விழுக்காடாக மாறாமல் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details