தமிழ்நாடு

tamil nadu

விவசாய நிலத்தில் கிடைத்த அம்மன் உலோக சிலை!

By

Published : Jul 16, 2020, 9:07 PM IST

பெரம்பலூர்: ஆடிப்பட்ட விதைப்பு பணிகளுக்காக நிலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, நூற்றாண்டு பழமை வாய்ந்த உலோக சிலை கண்டெடுக்கப்பட்டது.

Metal statue of goddess found
Metal statue of goddess found

தமிழ்நாடு முழுவதும் ஆடி மாதம் தொடங்கியதையொட்டி விவசாயிகள் ஆடிப்பட்ட விதைப்பு பணிகளுக்காக நிலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மழவராயநல்லூர் கிராமத்தில் சோமசுந்தரம் என்பவர் விதைப்பு பணிகளுக்காக நிலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒன்றேகால் அடி உயரமுள்ள தலை, கால் துண்டிக்கப்பட்ட அம்மன் உலோக சிலை கண்டெடுக்கப்பட்டது.

இந்தச் சிலை நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிலையாக காணப்படுகிறது. இதுகுறித்து தொல்லியல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தொல்லியல் துறையினர், “சிலை தொடர்பாக ஆய்வு செய்த பிறகுதான், இச்சிலை எந்த உலோகத்தில் செய்யப்பட்டது, எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்று பின்னர் தெரிய வரும்” என்று கூறினார்கள்.

தற்போது இந்தச் சிலை வருவாய் வட்டாட்சியர் சின்னதுரையிடம் ஒப்படைக்கப்பட்டது. விளைநிலப் பகுதியில் பழமை வாய்ந்த சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details