ETV Bharat / briefs

தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jul 16, 2020, 8:52 PM IST

திருநெல்வேலி: தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் என்ற பெயரில் சான்றிதழ் வழங்க கோரி நெல்லையில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கறுப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

TamilNadu makkal munnetra kazhagam protest
TamilNadu makkal munnetra kazhagam protest

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(ஜூலை 16) தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஏழு உட்பிரிவு சமுதாய பெயர்களை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் புதிய சமுதாய பெயரில் அழைப்பதற்கும், சான்றிதழ் வழங்கிடவும், ஆணை பிறப்பிக்கும் படி கறுப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே கோரிக்கை வலியுறுத்தி 250ஆவது நாள்களாக தொடர்ந்து கருப்பு சடடை அணிந்து வருவதாகவும் 25ஆவது நாளை குறிக்கும் வகையில் தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி கட்டி இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏழு உட்பிரிவு சமுதாய பெயரை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்று அழைப்பதற்கும், சான்றிதழ் வழங்கவும் ஆணை பிறப்பிக்கும் படி நாங்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இனி வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க: புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதலிடம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.