தமிழ்நாடு

tamil nadu

எதிர்க்கட்சி தலைவர்கள் ஆப்பிள் ஐ-போன் எச்சரிக்கை பதிவு - மத்திய அமைச்சர் விளக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 5:46 PM IST

I Phone security alert: பல எதிர்க்கட்சித் தலைவர்கள் வைத்து இருக்கும் ஆப்பிள் ஐ-போன்களுக்கு (state-sponsored attackers trying to remotely compromise) செல்போனிலுள்ள தகவல்கள் எடுக்க முயற்சித்ததாக எச்சரிக்கை பதிவுகள் வந்துள்ளது. இந்த பதிவின் நகலை எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது 'X' பக்கத்தில் பகர்ந்துள்ளனர்.

Opposition leaders claim they got alert from Apple about 'state-sponsored attacks' on their phones
எதிர்க்கட்சி தலைவர்கள் ஆப்பிள் ஐ-போன் எச்சரிக்கை பதிவு - மத்திய அமைச்சர் விளக்கம்!

டெல்லி:திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, சிவசேனா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா ஆகிய எதிர்க்கட்சித் தலைவர்களின் இன்று (அக்.31) ஆப்பிள் ஐ-போன்களிலுள்ள தகவல்கள் எடுக்க முயற்சி செய்ததாக எச்சரிக்கை பதிவுகள் வந்துள்ளன என அந்த பதிவின் நகலை தங்களது "X" பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தனது "X" பக்கத்தில், எனது தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றின் தகவல்களை எடுக்க முயற்சி செய்வதாக ஆப்பிள் நிறுவனம் தனக்கு எச்சரிக்கை பதிவுகள் மற்றும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. மேலும், இந்திய உள்துறை அமைச்சகம், அதானி மற்றும் மோடி ஆகியோரை சுட்டிக்காட்டி அந்த எச்சரிக்கை பதிவின் நகலைப் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பதிவை டேக் (Tag) செய்து I.N.D.I.A கூட்டணியிலுள்ள மூன்று தலைவர்கள் இது போன்ற எச்சரிக்கை பதிவு கிடைக்கப் பெற்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

சிவசேனா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி தனது "X" பக்கத்தில், தனக்கு வந்த எச்சரிக்கை பதிவின் நகலைப் பகிர்ந்து "Wonder who? Shame on you. Cc: @HMOIndia for your kind attention" என இந்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு எனத் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தனது "X" பக்கத்தில், ஆப்பிள் நிறுவனத்திடம் தகவல் சரிபார்த்துள்ளேன். நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எனக்கு மட்டுமல்லாமல் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவுக்கும் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து இதே எச்சரிக்கை பதிவு வந்துள்ளது. இதனை இந்திய உள்துறை அமைச்சகம் விசாரிக்குமா? எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா தனது "X" பக்கத்தில், மோடி அரசு இதை ஏன் செய்கிறீர்கள் என எச்சரிக்கை பதிவின் நகலைப் பதிவு செய்து தெரிவித்துள்ளார்.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீனின் 3வது தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி தனது ஆப்பிள் ஐ-போன்க்கும் இதே தகவல் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை பதிவில், உங்கள் ஐபோனை குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை பதிவை முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக் கொள்ளவும், இதனால் உங்கள் செல்போனிலுள்ள முக்கியமான தரவு, தகவல்தொடர்புகள் அல்லது கேமரா மற்றும் மைக்ரோஃபோனை அவர்களால் தொலைவிலிருந்து அணுக முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறும் போது, பல எதிர்க்கட்சித் தலைவர்களில் ஆப்பிள் ஐபோன்கள் ஹேக் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் தெரிவித்துள்ளனர். இது மிகப்பெரிய பிரச்சனைகள் இல்லை. இதே போல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி தலைமையில் முறையான விசாரணை செய்யப்பட்டது. ஆனால் அதில், எந்த தகவலும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதே போல் பிரியங்கா காந்தி வத்ராவின் இரண்டு குழந்தைகளின் போன்களும் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதிலும் எந்த தகவலும் எடுக்கப்படவில்லை. சிலர் தவறான தகவல்களை பரப்ப முயற்சிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! என்ன காரணம்?

ABOUT THE AUTHOR

...view details