தமிழ்நாடு

tamil nadu

நீட் தேர்வு முடிவு... ராஜஸ்தான் மாணவி முதலிடம்... தமிழ்நாட்டின் நிலை..?

By

Published : Sep 8, 2022, 10:19 AM IST

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய 1,32,167 மாணவர்களில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள்  வெளியானது  - ராஜஸ்தான் மாணவி முதலிடம்
நீட் தேர்வு முடிவுகள் வெளியானது - ராஜஸ்தான் மாணவி முதலிடம்

டெல்லி:டெல்லி: நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. 497 நகரங்களில் மொத்தம் 3,570 தேர்வு மையங்கள் தேர்வுகள் நடந்தன. சுமார் 17 லட்சத்து 78 ஆயிரத்து 025 பேர் எழுதினர். அதன்பின நேற்று (செப் 7) நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. நீட் தேர்வு முடிவுகளை www.neet.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இதனிடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இந்த கோளாறு நள்ளிரவு சீரானது. அதன்பின் முடிவுகளை எளிதாக பார்க்க முடிந்தது. இந்த முடிவுகளில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். ராஜாஸ்தானை சேர்ந்த தன்ஷிகா என்ற மாணவி 715 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த வத்சா ஆஷிஷ் பத்ரா 2ஆம் இடத்தை பிடித்தார். அதேபோல உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநில மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தமாக 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் முதலிடம்: தமிழ்நாட்டில் திரிதேவ் விநாயகா என்ற மாணவர் 705 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். இவர் இந்திய அளவில் 30 ஆவது இடத்தில் உள்ளார். மறுப்புறம் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. ஒரே மாதிரியான மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு டை-பிரேக்கர் விதியின்படி ரேங்குகள் வழங்கப்படும். இம்முறையின் அடிப்படையில் உயிரியலில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு முதல் இடம் கொடுக்கப்படும். உயிரியலில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் இருந்தால், இயற்பியலைத் தொடர்ந்து வேதியியலுக்கும் அதே விதி பயன்படுத்தப்படுகிறது.

இந்தாண்டு முதன்முறையாக, அபுதாபி, பாங்காக், கொழும்பு, தோஹா, காத்மாண்டு, கோலாலம்பூர், லாகோஸ், மனாமா, மஸ்கட், ரியாத், ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் துபாய் மற்றும் குவைத் போன்ற வெளிநாட்டு நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டது. அஸ்ஸாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது.

இதையும் படிங்க:2019இல் தனியார் மருத்துவமனைகள் வழங்கிய ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளில் 47.1% அங்கீகரிக்கப்படாதவை... ஆய்வில் அதிர்ச்சித்தகவல்...

ABOUT THE AUTHOR

...view details