தமிழ்நாடு

tamil nadu

மோடி விசிட்டிற்காக புதுப்பிக்கப்படும் மோர்பி அரசு மருத்துவமனை

By

Published : Nov 1, 2022, 1:25 PM IST

Etv Bharatமோடி விசிட்டிற்காக  புதுப்பிக்கப்பட்ட மோர்பி அரசு மருத்துவமனை
Etv Bharatமோடி விசிட்டிற்காக புதுப்பிக்கப்பட்ட மோர்பி அரசு மருத்துவமனை

குஜராத் மாநிலத்தில் மோர்பி பாலம் விழுந்த விபத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க பிரதமர் மோடி மோர்பி அரசு மருத்துவமனைக்கு செல்ல இருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு புதிதாக பெயிண்ட் அடிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

மோர்பி: குஜராத் மாநிலத்தில் சென்ற ஞாயிறு (அக்-30) அன்று தொங்கு பாலம் இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க இன்று (அக்-31) பிரதமர் மோடி மோர்பி அரசு மருத்துவமனைக்கு செல்ல உள்ளார். இதனிடையே மோடி வருகைக்காக மருத்துவமனையின் ஒரு பகுதியை மட்டும் அவசர அவசரமாக புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 300 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் மூன்று மாடிகள் உள்ளன.

முன்னதாக ஞாயிறு அன்று பாலம் இடிந்து விழுந்ததில் 134 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பேர் மோர்பி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 முதல் 5 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை விபத்தில் காயமடைந்தவர்களில் 56 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக விபத்து நடந்த பின்னும் மோடி அவரது பல நிகழ்ச்சிகளை ரத்து செய்யாமல் கலந்து கொள்வதாக பல தரப்பினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது மோடியின் வருகைக்காக சிறப்பு ஏற்பாடாக மோர்பி மருத்துவமனையின் நுழைவு வாயிலில் மஞ்சள் நிற பெயிண்டும், உள்ளே உள்ள சுவர்களில் வெள்ளை நிற பெயிண்டும் என அலங்காரப்படுத்துவது உயிரிழந்தவர்களின் உயிரை அவமானப்படுத்துவது போல் உள்ளதாக எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்த புதுப்பித்தல் வேலை குறித்து காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மோடி போட்டோ எடுப்பதற்குதான் இங்கு வருகிறார். அதற்காகவே இந்த ஏற்பாடுகள் என கூறியுள்ளனர். மேலும் ஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் மோடியின் போட்டோஷூட்டின் போது கட்டடத்தின் மோசமான நிலை வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மோர்பி மருத்துவமனை ஒரே இரவில் வர்ணம் பூசப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மோர்பி பாலம் விபத்து எதிரொலி ; அடல் பாலத்தில் குறைக்கப்பட்ட மக்கள் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details