தமிழ்நாடு

tamil nadu

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

By

Published : Oct 13, 2021, 3:41 PM IST

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்...

3PM
3PM

1. கோயில் நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடக்கம்!

இந்து சமய அறநிலைத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் காணிக்கையாக வந்த நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலமாக தொடங்கிவைத்தார்.

2.நீட் விலக்கு விவகாரம்: ஆளுநரைச் சந்திக்கும் ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 13) ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

3.பள்ளிகளுக்கு விடுமுறை - அரசின் முடிவுக்காக வெயிட்டிங்!

அனைத்துப் பள்ளிகளுக்கும் 16ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

4.'நீர்மட்டம் அதிகம் உள்ள ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றப்படும்'

சென்னையில் உள்ள மெட்ரோ ஏரிகளுக்குத் தொடர்ந்து நீர் வருவதால் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக நீர்மட்டம் அதிகம் உள்ள ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

5.நாட்டின் உள்கட்டமைப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்தும் மாபெரும் திட்டம்: தொடங்கிவைத்த மோடி

நாட்டின் உள்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்த உதவும் கதி சக்தி எனப்படும் சிறப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

6.நவராத்திரி: அவதாரமாக மாறி காட்சியளிக்கும் நித்யானந்தா

கைலாசா நாட்டில் வாழ்ந்துவரும் நித்யானந்தா நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு அவதாரமாக நேரலையில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

7. இறால் பண்ணை, வேளாண் பண்ணைகளுக்கு உரமாகும் மீன்கழிவுகள்

மீன் கழிவுகளை நன்கு அரைத்து அதனை உரமாக மாற்றி இறால் வளர்ப்போருக்கும், வேளாண்மை செய்வோருக்கும், மாடித்தோட்டம் வைத்திருப்போருக்கும் தருவதாக அகில இந்திய மீனவர் சங்க தேசிய செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் ரவி தெரிவித்துள்ளார்.

8. நாட்டில் புதிதாக 15,823 பேருக்கு கரோனா; 226 பேர் உயிரிழப்பு

நாட்டில் புதிதாக 15 ஆயிரத்து 823 நபர்களுக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு லட்சத்து ஏழாயிரத்து 198 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

9. நெடுமுடி வேணு குறித்து நினைவோடையை பகிர்ந்த மம்முட்டி

நடிகர் நெடுமுடி வேணு மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மம்முட்டி அஞ்சலி குறிப்பொன்றை எழுதியுள்ளார்.

10. 'இன்ஷா அல்லாஹ்' மனிதநேயத்தைப் போதிக்கிறது - பாக்யராஜ் பாராட்டு

திரை உலகிற்கும், உண்மையான வாழ்க்கை நடைமுறைக்கும் 'இன்ஷா அல்லாஹ்' திரைப்படம் மூலம் ஒரு சீரிய திருப்பணியை செய்துள்ளது பாராட்டுக்குரியது என இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details