தமிழ்நாடு

tamil nadu

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்த கர்நாடகா - எவ்வளவு குறைத்தது தெரியுமா?

By

Published : Nov 4, 2021, 10:32 PM IST

Diwali Gift
Diwali Gift

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்து கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெங்களூரு (கர்நாடகா):கர்நாடகாவில் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 7 ரூபாயைக் குறைத்துள்ளது.

இதன்மூலம் 1 லிட்டருக்கு பெட்ரோல் விலை முறையே ரூ.95.50-க்கும்; டீசல் விலை முறையே ரூ.81.50-க்கும் விற்பனையாகும். இந்த விற்பனை நடைமுறை தீபாவளி நாளான இன்று மாலை முதல் கர்நாடகாவில் அமலுக்கு வந்துள்ளது.

இதனால் மாநில கருவூலத்தில் இருந்து ரூ.2,100 கோடி செலவாகும் என்று கர்நாடக மாநில முதலமைச்சர் பசவ பொம்மை தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய அரசு நவம்பர் 3 இரவில் பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ.5ம்; டீசல் மீதான கலால் வரியில் ரூ.10ம் குறைத்து அறிவிப்பினை வெளியிட்டது.

கர்நாடகாவைத்தொடர்ந்து...

அஸ்ஸாம் மற்றும் திரிபுரா ஆகிய இரண்டு மாநிலங்களும் எரிபொருட்கள் மீதான வரியில் ரூ. 7ஐ குறைத்துள்ளன.

குளிர்கால விதைப்புக்கு முன்னதாக டீசல் மீது ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், எரிபொருட்கள் மீதான விலை குறைப்பு என்பது அத்தியாவசியப் பொருட்களின் பொதுவான விலை உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேசம் உட்பட ஏழு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தந்தை சுட்டு மூளைச்சாவு அடைந்த மகனின் உடலுறுப்பு தானம்!

ABOUT THE AUTHOR

...view details