தமிழ்நாடு

tamil nadu

அதிமுக யார் யார் உடன் கூட்டணி வைக்கும்: பொள்ளாச்சி ஜெயராமன் கூறிய நிபந்தனை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 11:04 AM IST

Jayaraman: அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில், எடப்பாடி பழனிச்சாமியை தலைவராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024
பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி ஜெயராமன்

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று பொள்ளாச்சி அ.தி.மு.க எம்எல்ஏ ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொள்ளாச்சி நகரம சார்பில், பூத் கமிட்டி கூட்டம் நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில், பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (பிப்.4) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், ”தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. தமிழகத்தில் சரியான சூழல் அமைய வேண்டுமென்றால், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளமாக நாடாளுமன்ற தேர்தல் இருக்கும். விலைவாசி ஏறியுள்ளதால், விவசாயம் மற்றும் நெசவு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பொள்ளாச்சி நகராட்சி, ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ளது. பொள்ளாச்சி நகரப் பகுதியில் உள்ள ஜோதி நகரில், 50 அடி திட்டசாலை தனிநபர் ஆக்கிரமிப்புக்காக உறுதிபடுத்த நகராட்சியில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியாக மாற்றம் செய்ய உள்ளனர் என்பது கண்டிக்கத்தக்கது. இதுவரை நடைபெற்ற ஊழலில் இது தலையான ஊழல் ஆகும்.

இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். பொள்ளாச்சி நகரத்தில் சட்ட ஒழுங்கு என்பது சரியாக கிடையாது. போலீஸ் அதிகாரி இருசக்கர வாகனத்தில் சென்று இரண்டு இடங்களில், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது சட்ட ஒழுங்கு சரி இல்லை என்பதாகும். ஆட்சி மாற்றத்திற்காக நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 40 இடங்களில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமியை தலைவராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இதையும் படிங்க: கைதான 23 மீனவர்களையும், 2 படகுகளையும் மீட்க வலியுறுத்தி வேலைநிறுத்தம்..தேர்தலை புறக்கணிக்கப்போவதாக மீனவர்கள் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details