Video - கையில் வாளுடன் குத்தாட்டம் போட்ட பாஜக மாவட்ட தலைவர் - கிளம்பியது புதுசர்ச்சை!

By

Published : Apr 18, 2022, 9:44 PM IST

thumbnail

மத்திய பிரதேசம் மாநிலம், நீமுச் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாஜக மாவட்ட தலைவர் பவண் பண்டிதர் கலந்துகொண்டார். அப்போது, அவர் அங்கிருந்தவர்களின் தோளில் ஏறி, கையில் வாளுடன் ஆட்டம் போட்டுள்ளார். இந்நிகழ்வின்போது அங்கு அரசு அதிகாரிகள், காவல் துறையினர் உள்ளிட்டோர் இருந்தனர். இதனைப் பொருட்படுத்தாமல் அவர் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனால் பவண் பண்டிதர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் எனப் பல்வேறு அமைப்பினர் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.