ETV Bharat / sukhibhava

அனைத்து சருமப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு "வைட்டமின் இ"

author img

By

Published : Jun 22, 2022, 10:46 PM IST

vitamin E
vitamin E

சருமப்பிரச்னைகள் இல்லாமல், இளமையான சருமத்தைப் பெற 'வைட்டமின் இ' அடங்கிய சரும தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும் என பிரபல அழுகுசாதன தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ரச்சித் குப்தா தெரிவித்துள்ளார்.

தூசு, புகை, மன அழுத்தம், சீரற்ற உணவுமுறை காரணமாக முகப்பரு, தோல் சுருக்கம் உள்ளிட்டப் பல்வேறு சரும பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் பெரும் சிக்கலாக இருக்கிறது.

சருமத்தைப் பராமரிப்பதற்கான பல்வேறு தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், சருமத்தைப் பராமரிக்க நாம் தேர்வு செய்யும் தயாரிப்புகளில் 'வைட்டமின் இ' இருந்தால் நல்லது என கேள்விப்பட்டிருப்போம்.

உண்மையில் 'வைட்டமின் இ' ஏன் நல்லது? அது எப்படி சருமப் பாதுகாப்புக்கு பயன்படுகிறது என்பது குறித்து பிரபல அழுகுசாதன தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ரச்சித் குப்தா கூறும்போது, "மாசு, தூசு, புகை உள்ளிட்டவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் வைட்டமின் இ மிகவும் உதவும்.

வைட்டமின் இ அடங்கிய கிரீம்கள் சருமத்தைப் பாதுகாப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. வெயிலில் இருந்து வரும் புறஊதாக்கதிர்கள் சருமத்தை சேதப்படுத்தாமல் வைட்டமின் இ தடுக்கிறது. விட்டமின் இ மற்றும் சி இடங்கிய கிரீம்கள் சருமத்தை நல்ல முறையில் பராமரிக்க உதவுகிறது.

வைட்டமின் இ அடங்கிய தயாரிப்புகளில் ஆன்டிஆக்சிடன்டுகள் இருப்பதால், அவை முகப்பரு, முகப்பருக்களின் தடயங்கள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக நன்றாக செயல்படும். சருமத்தின் பளிச்சென வைக்கவும், நிறத்தை ஒரு சீராக பராமரிக்கவும் வைட்டமின் இ கொண்ட தயாரிப்புகள் உதவும். சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து, நாள் முழுவதும் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

கற்றாழை, பாதாம், பப்பாளி உள்ளிட்டப் பொருட்களில் வைட்டமின் இ அதிகம் உள்ளது. நாம் சரும பராமரிப்பிற்காவும், அழகுக்காவும் வாங்கும் சன் ஸ்கிரீன், ஃபேஸ் வாஷ் உள்ளிட்டவற்றில் வைட்டமின் இ இருக்கிறதா? என்று சரிபார்த்து வாங்க வேண்டும். அதேபோல் அதிகளவு ரசாயனங்கள் இல்லாத, இயற்கையான பொருட்கள் அடங்கிய தயாரிப்புகளை வாங்க வேண்டும். வைட்டமின் இ உள்ள தயாரிப்புகளைப் பயன்படுத்தி உங்களது சருமத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: சர்வதேச யோகா தினம் -2022; நலமுடன் வாழ வழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.