ETV Bharat / sukhibhava

சர்வதேச யோகா தினம் -2022; நலமுடன் வாழ வழி

author img

By

Published : Jun 21, 2022, 8:24 AM IST

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று(ஜூன்21) கொண்டாடப்படுகிறது. யோகா தினத்தின் வரலாறு மற்றும் அதன் பயன்கள் குறித்து காண்போம்.

சர்வதேச யோகா தினம் -2022; நலமுடன் வாழ வழி
சர்வதேச யோகா தினம் -2022; நலமுடன் வாழ வழி

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி முதல் சர்வதேச அளவில் யோகா தினம் (International Day of Yoga )கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த வருடம் 8ஆவது சர்வதேச யோகா தினம் ஆகும். இந்த கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதத்தில் இந்த வருட யோகா கொண்டாட்டத்தின் கரு, ‘மனிதத்திற்கான யோகா’ என கொண்டாடப்படுகிறது. யோகாவின் நன்மைகளையும் அதன் சிறப்புகளையும் அனைவரும் அறியும் வண்ணம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

யோகா தினத்தின் வரலாறு: இந்தியாவில் 5000 வருடங்களுக்கு முன் தோன்றிய அரிய கண்டுபிடிப்பு யோகா ஆகும். இதன் மூலம் உடல்,மனம் மற்றும் ஆத்மா ஆகிய மூன்றையும் சீராக வைத்துக் கொள்ள முடியும். இவை மூன்றுக்கும் யோகா ஆரோக்கியமான பயன்களை அள்ளி வழங்குகிறது.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று அமெரிக்காவின் பொது மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘“யோகா இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற பரிசு. இது மனம் மற்றும் உடலின் ஒற்றுமையை உள்ளடக்கியது. யோகா பயிற்சி சிந்தனை மற்றும் செயல் கட்டுப்பாடு மற்றும் நிறைவேற்றம்; மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கம்; ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது. இது உடற்பயிற்சியைப் பற்றியது மட்டும் அல்ல. மனிதன் மற்றும் இயற்கையுடனான ஒற்றுமை உணர்வை கண்டறிவதாகும்’ என்று கூறினார்.

இதனையடுத்து ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடுமாறு நரேந்திர மோடி பரிந்துரைத்தார். இந்த தேதியில் தான் சங்கராந்தி வருகிறது. மேலும் "இந்த தேதி வடக்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட நாள் ஆகும். இந்த நாள் உலகின் பல பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டது. பின்னர் டிசம்பர் 11, 2014 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஜூன் 21 ஐ 'சர்வதேச யோகா தினமாக' அறிவித்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், கோவிட்-19 தொற்றுநோய் மக்களின் மனம் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதித்தது. மேலும் அவர்களில் பலர் மன அழுத்தம், பீதி, பதற்றம், பயம், தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். இது தவிர, கோவிட்-19 இலிருந்து மீண்ட பிறகு, மக்கள் இரத்த அழுத்தம், நீரிழிவு, நுரையீரல் மற்றும் இதயம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.

இன்றைய வாழ்க்கை முறையில் யோகா கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானதாகும். உடலில் நேர்மறை ஆற்றலை கடத்துவதற்கும், உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளைத் தடுப்பதற்கும் யோகா மிகவும் உதவியாக இருக்கும். இன்றைய வேகமான உலகில், மக்கள் பெரும்பாலும் யோகாவை கடைபிடிக்க முனைகின்றனர். இருப்பினும் பலர் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை புறக்கணித்து வேகமான உலகில் வாழ்கின்றனர்.

இவை அனைத்திற்கும் மத்தியில், அவர்களின் வாழ்க்கை முறையும் பெரிய அளவில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மிக இளம் வயதிலேயே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பல உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். இங்கு உடற்பயிற்சி, மற்றும் வலிமையைப் பேணுவதற்கும், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், யோகா மிகவும் உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க:பிரதமர் மோடி தலைமையில் மைசூர் அரண்மனையில் சர்வதேச யோகா தினம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.