ETV Bharat / sukhibhava

கரோனா - குழந்தைகளை பாதுகாக்குமா காய்ச்சல் தடுப்பூசிகள்?

author img

By

Published : Jul 27, 2021, 7:26 AM IST

குழந்தைகளை பாதுகாக்குமா காய்ச்சல் தடுப்பூசிகள்
குழந்தைகளை பாதுகாக்குமா காய்ச்சல் தடுப்பூசிகள்

கரோனா தொற்றின் மூன்றாம் அலையால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து பரவிவரும் நிலையில், காய்ச்சல் தடுப்பூசிகளால் பயன் உள்ளதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்...

அமெரிக்காவில் கரோனா தொற்று தொடர்பான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் 2019, 2020ஆகிய ஆண்டுகளில் குளிர் காய்ச்சலுக்காக தடுப்பூசி செலுத்திக்கொண்ட குழந்தைகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு குறைவாக ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் உள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள், குழந்தைகளுக்கு குளிர் காய்ச்சல் அல்லது காய்ச்சல் தடுப்பூசி செலுத்த பரிந்துரைக்கின்றனர். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள நமது ஈடிவி பாரத் குழந்தைகள் நல மருத்துவரான சோனாலி நவலேவை சந்தித்து பேசினோம்.

மருத்துவர் சோனாலி நவலே கூறுகையில், "கரோனா தொற்று மூன்றாம் அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றார். இது மழைக்காலம் என்பதால் சளி, இருமல், காய்ச்சல், சுவாச பிரச்னை போன்றவை ஏற்படலாம். குளிர் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் மூலம் இவற்றில் இருந்து குழந்தைகளை ஓரளவு பாதுகாக்கலாம்.

கரோனா தொற்றுக்கான அறிகுறிகளும், குளிர் காய்ச்சலுக்கான அறிகுறிகளும் ஒன்று போலவே இருப்பதால், குழந்தைகளுக்கு குளிர் காய்ச்சல், நிமோனியா தடுப்பூசி செலுத்தலாம். அது அவர்களை கரோனா தொற்று பெரிதாக பாதிக்காத வகையில் பாதுகாக்கும்.

இதுவரை குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி அனுமதிக்கப்படவில்லை. அதற்கான சோதனைகள் நடைபெற்றுவருகின்றன. வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும். கரோனா அறிகுறிகளிடமிருந்து காய்ச்சல் தடுப்பூசிகள் பாதுகாத்தாலும், இது தொடர்பாக அரசிடமிருந்து எந்த வழிகாட்டலும் கிடைக்கவில்லை.

காய்ச்சல் தடுப்பூசிகள் கரோனா அறிகுறிகளிடமிருந்து பாதுகாத்தாலும், கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வதே இப்போதைக்கு பாதுகாப்பானதாக இருக்கும்" என்றார்.

இதையும் படிங்க: ஐவிஎஃப் சிகிச்சை: குழந்தை இல்லாத தம்பதியினருக்கு வரப்பிரசாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.