ETV Bharat / state

விருதுநகர் கூட்டுப்பாலியல் வழக்கில் மீண்டும் ஒரு ட்விஸ்ட் - பாலியல் வழக்கிலிருந்து விடுவிக்கப்படும் பள்ளி மாணவன்!

author img

By

Published : May 11, 2022, 6:05 PM IST

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் மீண்டும் ஒரு திருப்பம்.பாலியல் வழக்கிலிருந்து விடுவிக்கப் படும் ஒரு பள்ளி மாணவன்.
விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் மீண்டும் ஒரு திருப்பம்.பாலியல் வழக்கிலிருந்து விடுவிக்கப் படும் ஒரு பள்ளி மாணவன்.

விருதுநகர் கூட்டுப்பாலியல் வழக்கில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு பள்ளி மாணவன் இந்தப்பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்.

விருதுநகர்: கடந்த மார்ச் மாதம் விருதுநகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் உட்பட தனது காதலன் ஹரிஹரன், ஜூனத் அஹமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 8 பேர் மீது புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் எட்டு பேரும் விருதுநகர் ஊரக காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாக கருதப்படும் ஹரிஹரன், ஜூனத் அஹமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேர் மீதும் தற்போது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடிதம் எழுதிய மாணவன்: அவர்கள் தற்போது மதுரை மத்திய சிறையில் இருக்கிறார்கள். மீதமுள்ள நான்கு பள்ளி மாணவர்களையும் இளைஞர் குழும நீதிமன்ற நீதிபதியான மருது பாண்டியன் தனது சொந்த ஜாமீனில் விடுவித்தார். கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளியில் வந்த இந்த மாணவர்களில் ஒருவர், தனது வழக்கறிஞர் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் என மொத்தம் பத்துப் பேருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

குற்றப்பத்திரிக்கையில் பெயர் நீக்கம்: அந்த கடிதத்தில், ’தான் எந்த தவறும் செய்யவில்லை. அந்தப்பெண் தான் என்னை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தினார். மீண்டும் என்னிடம் பணம் கேட்டு மிரட்டவும் செய்தார்’ என அந்த மாணவன் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். மேலும், ’என் மீது எந்த ஒரு குற்ற முகாந்திரமும் இல்லை. இதை நான் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் வைத்து கூறிய போதும் அதை அவர்கள் பொருட்படுத்தாமல் என் மீது வழக்குத் தொடுத்தார்கள்’ என மாணவன் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தபட்சத்தில் தற்போது சிபிசிஐடி போலீசார் அந்த ஒரு மாணவனின் பெயரை மட்டும் இந்த வழக்கில் இருந்து நீக்க நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் தற்போது தயாரித்து வரும் குற்றப்பத்திரிக்கையில் அந்தப் பள்ளி மாணவனின் பெயர் இல்லை எனவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் மூலம் 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.