ETV Bharat / state

விருதுநகரில் கண்டபெருண்ட ஆசனம் செய்து 9 வயது மாணவி சாதனை!

author img

By

Published : Dec 7, 2019, 12:40 PM IST

yoga
yoga

விருதுநகர்: ஒன்பது வயது மாணவி ஒருவர், கண்ணாடி மீன் தொட்டிக்குள் 8 நிமிடம் 2 நொடிகள் கண்டபெருண்ட ஆசனத்தில் இருந்து உலக சாதனை படைத்துள்ளார்.

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையைச் சேர்ந்த கோவிந்தராஜ் - பார்வதி தம்பதியின் மகள் முஜிதா(9). இவர், விருதுநகர் செவல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வரும் மாணவி முஜிதா, ஒரு அடி அகலமும் 17 இன்ச் நீளமும் கொண்ட சிறிய கண்ணாடி மீன் தொட்டிக்குள் அமர்ந்து, தனது இரு கால்களையும் முதுகு பக்கமாக வளைத்து அமர்ந்தவாறு 8 நிமிடம் 2 நொடிகள் கண்டபெருண்ட ஆசனத்தில் இருந்து உலக சாதனை படைத்துள்ளார்.

yoga

இந்த சாதனை நோபள் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கான சான்றிதழும் பதக்கமும் மாணவி முஜிதாவுக்கு வழங்கப்பட்டன. இதற்கு முன் சீனாவைச் சேர்ந்த யோகி என்பவர், மூன்று நிமிடங்கள் யோகாசனம் செய்த சாதனையை மாணவி முஜிதா முறியடித்துள்ளார்.

Intro:விருதுநகர்
07-12-19

விருதுநகர் அருகே சிறிய கண்ணாடி மீன் தொட்டிக்குள் அமர்ந்து நீண்ட நேரம் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார் 9 வயது சிறுமி

Tn_vnr_01_school_student_yoga_noble_record_vis_script_7204885Body:விருதுநகரில் கண்ணாடி மீன் தொட்டிக்குள் கண்ட பெருண்டசானம் 8 நிமிடம் 2 வினாடிகள் செய்து 9 வயது மாணவி உலக சாதனை!

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை யைச் சேர்ந்த கோவிந்தராஜ்- பார்வதி தம்பதியின் மகள் முஜிதா (9). விருதுநகர் செவல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த மூன்றாண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வரும் மாணவி முஜிதா இன்று ஒரு அடி அகலமும் 17 இன்ச் நீளமும் கொண்ட சிறிய கண்ணாடி மீன் தொட்டிக்குள் அமர்ந்து கண்டபெருண்ட ஆசனம் என்ற ஆசனத்தில் தனது இரு கால்களையும் முதுகு பக்கமாக வளைத்து அமர்ந்தவாறு 8 நிமிடங்கள் இரண்டு நொடிகள் தொடர்ந்து இருந்து உலக சாதனை படைத்துள்ளார்.
இச்சாதனை நோபள் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும் அதற்கான சான்றிதழும் பதக்கமும் மாணவி முஜிதா வுக்கு வழங்கப்பட்டது.


இதற்கு முன் சீனாவைச் சேர்ந்த யோகி மூன்று நிமிடங்கள் மட்டுமே இருந்து செய்த சாதனையை மாணவி முஜிதா தற்பொழுது முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டி: ஜி. முஜிதா - பள்ளி மாணவிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.