ETV Bharat / state

’ நகைக்கடன் தள்ளுபடி திட்டம் ஏமாற்று வேலை’ - சிவி சண்முகம்

author img

By

Published : Oct 2, 2021, 8:32 PM IST

மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தொடர்பான காணொலி
மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தொடர்பான காணொலி

நகைக்கடன் தள்ளுபடி திட்டம் ஏமாற்று வேலை என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, இன்று (அக்.2) கோலியனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

வீட்டில் வேலை

கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என கூறிவிட்டு, தற்போது உண்மையான ஏழைகளுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி என கூறியிருப்பது ஏமாற்று வேலை. யார் உண்மையான ஏழைகள்? என அரசு விளக்க வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என கூறியிருந்தோம். கடந்த நான்கு மாதம் நடைபெற்ற திமுக ஆட்சியில், இதுவரை எந்த மக்கள் பணியும் நடைபெறவில்லை.

அமைச்சர்கள் செய்கின்ற ஒரே பணி, ஸ்டாலின் குடும்பத்திற்கு செய்கின்ற பணிதான். இவர்களுக்கு கோட்டைக்கு பதிலாக ஸ்டாலின் வீட்டில்தான் வேலை. எங்களது பத்து ஆண்டுகால ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், கறவை மாடு வழங்குதல், பசுமை வீடு, குடிமராமத்து பணி உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள், அதிமுக ஆட்சி காலத்தில் எந்தவித தங்கு தடையின்றி நடத்தப்பட்டன. இதற்கு நேர்மாறாக கடந்த ஆண்டு அதிமுகவால் கொண்டுவரப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வேறு மாவட்ட பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தொடர்பான காணொலி

மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்று, திமுக அரசு ஆட்சியை பிடித்துள்ளது" என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நா கூசாமல் பேசிய துரைமுருகனுக்கு கண்டனம் - ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.