ETV Bharat / state

திருச்சி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 3:27 PM IST

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

KN Nehru inspect Trichy airport: திருச்சியில் புதிதாகத் திறக்கப்பட உள்ள விமான நிலைய புதிய முனையத்தை, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய விமான முனையம் கட்ட இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் ரூ. 951 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கி துரிதமான முறையில் பணிகள் நடைபெற்று வந்தது.

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்கும் சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் போன்ற பகுதிகளுக்கும் தினசரி விமானச் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, ரூ.951 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், கூடுதல் செலவினமாக ரூ.249 கோடி என மொத்தம் ரூபாய் 1200 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்று, புதிய முனையம் விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த புதிய முனை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியாகியது. ஆனால், அதிகாரப்பூர்வமாகத் தகவல் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், பிரதமர் புதிய விமான முனையம் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விமான நிலையத்தின் புதிய முனையத்தை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு இன்று (டிச.26) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, "வருகிற ஜனவரி 2ஆம் தேதி விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. எனவே, அவரது வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்" இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், விமான நிலைய இயக்குநர், மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.