ETV Bharat / state

லலிதா ஜுவல்லரியில் ஐந்து நாட்களாக ஓட்டை போட்ட கொள்ளையர்கள் - திருச்சி ஆணையர்

author img

By

Published : Oct 16, 2019, 6:38 PM IST

trichy commissioner

திருச்சி: லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிப்பதற்காக ஐந்து நாட்களாக கொள்ளையர்கள் சுவற்றில் துளையிட்டதாக காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என்.எஸ்.பி சாலை, பெரியகடைவீதி, நந்தி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் அமைத்துள்ளனர். மேலும் கூட்டம் காரணமாக தெப்பக்குளம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் இன்று திறந்துவைத்தார்.

இந்தப் புறக்காவல் நிலையத்தில் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபடவுள்ளனர். இந்த விழாவில் மாநகர துணை ஆணையாளர்கள் மயில்வாகனன், நிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தெப்பக்குளம் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த காவல் ஆணையர்

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் அமல்ராஜ், "லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மூன்று பேர் மட்டுமே நேரடியாக சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். அவர்கள் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று முறை கடைக்கு நகை வாங்குவது போல் வந்து நோட்டமிட்டு சென்று பின் கடையின் சுவற்றில் நான்கு முதல் ஐந்து நாட்களாக சிறிது சிறிதாக உடைத்து துளையிட்டுள்ளனர்.

கடையின் சுவர் அருகே அமைந்துள்ள காம்பவுண்ட் சுவர் பகுதி வெளியில் தெரியாதபடி மறைத்ததால் திருடர்கள் துளையிட்டதை யாரும் கவனிக்கவில்லை. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் பல கொள்ளைகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் விசாரணையை விரைந்து முடித்து நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது.

கர்நாடகா மாநிலத்திலும் இந்த குற்றவாளிகள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அம்மாநில காவல்துறையினர் முருகனை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதன் அடிப்படையில்தான் கர்நாடக காவல்துறையினர் இங்கு வந்து நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் சட்டப்படிதான் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்" என்றார்.

மேலும் படிக்க: லலிதா ஜுவல்லரியில் கொள்ளை: 12 கிலோகிராம் தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல்!

Intro:Body:திருச்சி:
லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிப்பதற்காக கொள்ளையர்கள் 5 நாட்களாக சுவற்றில் ஓட்டை போட்டதாக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என்எஸ்பி ரோடு, பெரியகடைவீதி, நந்தி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் அமைத்துள்ளனர்.
மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் தெப்பகுளம் பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த புறக் காவல் நிலையத்தை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் இன்று திறந்து வைத்தார். இந்த புறக்காவல் நிலையத்தில் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். இந்த திறப்பு விழாவில் மாநகர துணை கமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கமிஷனர் அமல்ராஜ் செய்தியாளரிடம் பேசுகையில், லலிதா ஜுவல்லரி கொள்ளையில் 3 பேர் மட்டுமே நேரடியாக சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று முறை கடைக்கு நகை வாங்குவது போல் வந்து நோட்டமிட்டு சென்றுள்ளனர். மேலும் கடையின் சுவற்றில் 4 முதல் 5 நாட்களாக சிறிது சிறிதாக உடைத்து ஓட்டை போட்டு உள்ளனர். சுவற்றின் அருகே காம்பவுண்ட் சுவர் இருப்பதாலும், அந்தப் பகுதி வெளியில் தெரியாமல் ஒதுக்கு புறமாக பகுதியாகவும் இருந்தாலும் ஓட்டை போட்டதை யாரும் கவனிக்கவில்லை. இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் பல கொள்ளைகளில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இவற்றை கணக்கெடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் விசாரணையை விரைந்து முடித்து நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் பணி துரிதமாக நடந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்திலும் இந்த குற்றவாளிகள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அங்கு முருகனை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையின்போது திருச்சியில் நகைகளை முருகன் பத்தி இருந்தது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் தான் கர்நாடக போலீசார் இங்கு வந்து நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் சட்டப்படிதான் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.