ETV Bharat / state

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பகல்பத்து 9ஆம் நாள் உற்சவம்!

author img

By

Published : Dec 31, 2022, 10:36 AM IST

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பகல்பத்து 9ஆம் நாள் உற்சவம்!
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பகல்பத்து 9ஆம் நாள் உற்சவம்!

திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலின் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து 9ஆம் நாள் உற்சவத்தில், முத்து பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சியளித்தார்.

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில், கடந்த 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்தை அடுத்து, 23ஆம் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி எனும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் பகல்பத்து நிகழ்வின் 9ஆம் நாளான இன்று (டிச.31) காலை, ‘முத்துக்குறி' பாசுரத்திற்கு ஏற்ப நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை, முத்துகலிங்கு ஆபரணம், முத்தங்கி, முத்து அபயஹஸ்தம், முத்து திருவடி, முத்து ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து தங்கப் பல்லக்கில் எழுந்தருளிளார்.

ஶ்ரீரங்கம் கோயிலின் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து 9ஆம் நாள் உற்சவத்தில், முத்து பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சியளித்தார்

பின்னர் கோயிலின் உள்பிரகாரங்களில் சுற்றி வந்த நம்பெருமாள், திருமங்கையாழ்வாரின் திருவாய்திருமொழி பாசுரங்களை கேட்டருளினார். தொடர்ந்து அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்களுடன் எழுந்தருளி உள்ளார். இன்று இரவு அரையர்கள் சேவையை அயடுத்து நம்பெருமாள் மூலஸ்தானத்தைச் சென்றடைவார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பகல்பத்து 8ஆம் திருவிழா உற்சவம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.