ரயில் மோதி இரண்டு துண்டான ஜல்லிக்கட்டு காளை.. திருச்சியில் நிகழ்ந்த சோகம்!
Updated on: Jan 24, 2023, 1:13 PM IST

ரயில் மோதி இரண்டு துண்டான ஜல்லிக்கட்டு காளை.. திருச்சியில் நிகழ்ந்த சோகம்!
Updated on: Jan 24, 2023, 1:13 PM IST
திருச்சி அருகே திருவெறும்பூரில் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை, ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரியில், நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில், திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடியைச் சேர்ந்த சுதாகர் என்பவரின் காளையும் பங்கேற்றது. வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளையை, உரிமையாளரால் மீண்டும் பிடிக்க முடியவில்லை. சுதாகரும், அவரது குடும்பத்தாரும் காளையைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், திருச்சி – தஞ்சை ரயில் வழித்தடத்தில், குமரேசபுரம் அருகே, அந்த ஜல்லிக்கட்டு காளை, ரயிலில் அடிபட்டு, இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையறிந்த சுதாகரும், அவரது குடும்பத்தாரும் அங்குச் சென்று, காளையைப் பார்த்துக் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குக - கே.பி.அன்பழகன்
