ETV Bharat / state

உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Sep 27, 2019, 8:50 AM IST

பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி: உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாலை கொள்முதல் செய்கின்ற ஆரம்ப சங்கங்களிலேயே சத்து அளவை குறித்துக் கொடுத்திடுக!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வட்டாட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் பால் உற்பத்தியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பேரணியாக வந்து கலந்துகொண்டனர். இதில், ஆவின் நிர்வாகம் பாலை கொள்முதல் செய்கின்ற ஆரம்ப சங்கங்களிலேயே சத்து அளவை குறித்துக் கொடுத்திட வேண்டும் என்ற கோரிக்கை முழக்கம் முன்னிறுத்தப்பட்டது.

பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின்போது,

  • சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்,
  • ஆவின்பால் கொள்முதல் தினசரி 50 லட்சம் லிட்டராக உயர்த்திட வேண்டும்,
  • கால்நடை தீவனம் 50 விழுக்காடு மானியத்தில் வழங்க வேண்டும்,
  • சத்துணவுத் திட்டத்தில் ஆவின்பால் சேர்த்து வழங்க வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Intro:உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி - பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.Body:தமிழ்நாடு முமுவதும் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வட்டாட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் நடைபெற்றது.சுமார் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் ஆவின் நிர்வாகம் பாலைக் கொள்முதல் செய்கின்ற ஆரம்ப சங்கங்களிலேயே சத்து அளவை குறித்து கொடுத்திட வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த வேண்டும்.ஆவின் பால் கொள்முதல் தினசரி 50 லட்சம் லிட்டராக உயர்த்திட வேண்டும். கால்நடை தீவனம் 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் ஆவின் பால் சேர்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்னககளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.