ETV Bharat / state

Bakrid: திருச்சியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

author img

By

Published : Jun 29, 2023, 11:26 AM IST

திருச்சியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர் சிறப்பு தொழுகை
திருச்சியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர் சிறப்பு தொழுகை

திருச்சியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

திருச்சியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர் சிறப்பு தொழுகை

திருச்சி: பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு வருடமும் அரேபிய மாதம் துல்ஹஜ் பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கியமான ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம் மேற்கொள்வது. ஹஜ் பெருநாள் தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக உள்ளது.

இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக தியாக திருநாள் கொண்டாடப்படுவதாகவும், அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதன் பின் ஆடு, மாடு போன்றவற்றை குர்பானி கொடுத்து, அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தங்களுக்கும் என பிரித்து மகிழ்ச்சியுடன் தியாகத் திருநாளை கொண்டாடினர். இந்த நிலையில், இன்று பக்ரீத் பண்டிகையினை பல்வேறு இடங்களிலும் இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.

இதையும் படிங்க: Bakrid: மயிலாடுதுறையில் செல்பி எடுத்து பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்த இஸ்லாமியர்கள்

பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்ற பின்ன,ர் வசதி படைத்தவர்கள் அதாவது எல்லா செலவுகளும் போகையில் ரூ.5 ஆயிரம் ரொக்கம் இருந்தாலே அவர்கள் கண்டிப்பாக குர்பானி கொடுக்க வேண்டும் என்கிறது ஷரிஅத். உற்றார், உறவினர், ஏழைகளை இந்த நாளிலே மறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த குர்பானி கொடுக்கும் நிகழ்வு அமைந்திருக்கிறது.

மேலும், இயன்றதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவுக என்ற கோட்பாடு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான கடமை என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. குர்பானிக்காக பிராணியை பலி கொடுக்க அறுக்கும்போது, அதன் ரத்தச் சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னதாக இறைவன் இடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகிறது.

எனவே, மனம் திறந்து குர்பானி கொடுங்கள் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக முகமது ராஜா , திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர், திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் ஃபைஸ், மாவட்ட செயலாளர் அசுரப் அலி, மாவட்ட பொருளாளர் காஜமியான், மாநில அமைப்பு செயலாளர் மிட்டாய்காதர், மாநில செயலாளர் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Madurai Metro: வைகை ஆற்றின் அடியில் மெட்ரோ ரயில் பாதை - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.