ETV Bharat / state

அவிநாசியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம்!

author img

By

Published : Dec 4, 2020, 3:21 PM IST

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம்  அவிநாசி சிப்காட் தொழில் பூங்கா  அத்திக்கடவு திட்டம்  Avinashi Water Project  People Dharna protests against the formation of Sipcot  Avinashi Sipcot Issue
Avinashi Sipcot Issue

திருப்பூர்: அவிநாசியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தத்தனூர், புளிப்பார், புஞ்சை தாமரை குளம் ஆகிய மூன்று ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் சுமார் 846 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையாக தத்தனூர் ஊராட்சிமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதையடுத்து, தற்போது நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெறுவதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினர், வட்டாட்சியரிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.

தொடர்ந்து, தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தத்தனூர், புஞ்சை தாமரை குளம் ஆகிய மூன்று ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்றி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று இன்று (டிச.04) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது, அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரடியாக மனு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்

இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், " தற்போது அவிநாசி அத்திக்கடவு திட்டம் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில், 846 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமையுமானால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். தங்கள் விவசாய நிலங்கள் பறிபோகும். எனவே அப்பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கக்கூடாது" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சிப்காட் தொழிற்பேட்டையில் சைலேந்திர பாபு நேரில் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.