உடுமலை, யானையை கொன்று தந்தம் கடத்தல்

author img

By

Published : Aug 31, 2021, 12:50 AM IST

elephant killed for ivory

திருப்பூர்: உடுமலைப்பேட்டை வனச்சரகம் பகுதியில் ஒற்றை தந்தத்துடன் ஆண் யானை இறந்துகிடந்தது தொடர்பாக வனத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்ட வனச்சரகம் அருகே கரட்டுர் சுற்று, சடையம்பாறை சராக வனபகுதியில் ஒற்றை தந்தத்துடன் ஆண் யானை (வயது சுமார் 35) நேற்று (ஆக். 29) இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக, மாவட்ட வன அலுவலர் கணேஷ், உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம், வனசரக அலுவலர் தனபால், வனவர், வனக் காப்பாளர், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், அரசு வனத்துரை கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் கரட்டூர் கால்நடை மருத்துவர் அரவிந்த் அடங்கிய குழு சம்பவ இடத்தை இன்று (ஆக். 30) தணிக்கை செய்தனர்.

அப்போது இறந்த யானையின் ஒற்றை தந்தம் காணாமல் போனது தெரியவந்த நிலையில், இறந்த யானைக்கு உடற்கூராய்வு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யானையின் தந்தமானது அதன் இறப்புக்கு பின் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஆய்வுக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், உதவி வன பாதுகாவலர் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டு, யானையை கொன்ற குற்றவாளியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய்க்கு மனநல பாதிப்பு இல்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.