குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய்க்கு மனநல பாதிப்பு இல்லை

author img

By

Published : Aug 30, 2021, 8:25 PM IST

Updated : Aug 30, 2021, 8:31 PM IST

பெற்ற குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய்க்கு மனநிலை பாதிப்பு இல்லை

செஞ்சி அருகே பெற்ற குழந்தையை கொடூரமாகத் தாக்கி வீடியோ எடுத்த தாய்க்கு மனநல பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம்: பெற்ற குழந்தையை தாய் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

செஞ்சி அருகே மணலப்பாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். இவருக்கும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துளசி(23) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் கோகுல்(4), பிரதீப்(2) உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

குழந்தையை தாக்கி வீடியோ பதிவு

இதன் காரணமாக துளசி கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது இளைய மகன் பிரதீப்பை அடிக்கடி கடுமையாக தாக்கி அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த வடிவழகன் துளசி மீது சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, குழந்தைகளை தந்தையிடம் விட்டுவிட்டு ஆந்திராவில் தனது தாய்வீட்டுக்கு துளசி சென்று விட்டார்.

பெற்ற குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய்க்கு மனநிலை பாதிப்பு இல்லை

ஆந்திராவில் கைது

வடிவழகனின் புகாரையடுத்த துளசி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையிலான தனிப்படையினர், துளசியை நேற்று (ஆக.29) ஆந்திராவில் கைது செய்து செஞ்சி அழைத்து வந்தனர்.

15 நாள் நீதிமன்ற காவல்

துளசிக்கு மனநல பாதிப்பு இருக்குமோ என்ற அடிப்படையில் மருத்துவர்கள் அவரை இன்று (ஆக.30) பரிசோதித்தனர். இதில் அவருக்கு மனநல பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் துளசியை செஞ்சி குற்றவியல் நீதிபதி தினேஷ் முன் ஆஜர்படுத்தினர். துளசியை கடலூர் மத்திய சிறையில் உள்ள பெண்கள் கிளை சிறையில், 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தாய்: கொலை முயற்சி வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை!

Last Updated :Aug 30, 2021, 8:31 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.